கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் , அரசு அனுமதியோடும் பார்வையில் குறிப்பிட்டுள்ள பயிற்சிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பயிற்சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , மாணவர்கள் நலன் கருதி அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் Titan இணைந்து நடத்தும் Mobile Science Lab and Science Centre ஆகிய திட்டங்களை செயல்படுத்த பள்ளிகளிலிருந்து 6 - ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை அறிவியல் / கணிதம் பாடம் போதிக்கும் பள்ளிக்கு ஒரு அறிவியல் / கணிதம் ஆசிரியருக்கு " Construction with Make Your Own Lab " நான்கு நாட்கள் Workshop பயிற்சியினை ஏற்கனவே இணையவழியில் அகஸ்தியா மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அகஸ்தியா சார்பாக பயிற்சி குப்பம் ( ஆந்திரா மாநிலம் ) வளாகத்தில் 26.10.2021 முதல் 29.10.2021 வரை நடைபெற உள்ளதால் 25.10.2021 பி.ய முதல் பணியிலிருந்து விடுவித்து பயிற்சியில் கலந்து கொள்ள தக்க அறிவுரைகள் வழங்குமாறு கிருஷ்ணகிரி / ஒசூர் / மத்தூர் / தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / நடுநிலைப்பள்ளி / அரசு உதவிப்பெறும் பள்ளி / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் உங்களின் சந்தேகங்களுக்கு அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்படுகிறது .
குறிப்பு :
• இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு உணவு / தங்கும் வசதி செய்யப்பட்டுள்து . இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 25.10.2021 அன்று மாலை 04.00 மணியளவில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் அனைவரும் குப்பம் செல்வதற்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது .
* இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின் பொருட்டு கொரோனா வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறத்தப்படுகிறது .
தொடர்புகொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பாளர்கள் :
1. திருமதி.புஷ்பா ( 9513300669 )
2. செல்வி.திபீகா ( 9483630088 )
3. திரு - மூவேந்தன் ( 6382607814,8754737346 )
இணைப்பு : இணையவழியில் அகஸ்தியா மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...