அரசு/ மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு
விடுமுறை விடப்படும் பொழுது சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது: மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேச்சு..
விராலிமலை,அக்.1:
அரசு/ மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் பொழுது சிறப்பு
வகுப்புகள் வைக்கக்கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சாமி.சத்திய மூர்த்தி விராலிமலை புராவிடன்ஸ் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில்
தலைமைஆசிரியர்களுக்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
புதுக்கோட்டை,மாவட்டம்,இலுப்பூ ர்
கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி
உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கான கூட்டம் புராவிடன்ஸ்
கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில்
கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி
பேசியதாவது: ஆசிரியர்கள் அனைவரும் காலை 9.45 மணிக்குள் தங்களது வருகையினை
கல்வியியல் மேலாண்மை தகவல் மைய (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட
வேண்டும்.பள்ளி வேலை நாளில் தினந்தோறும் காலை 9.15 மணி எனில் மாலை 4.15
மணி வரையிலும் ,காலை 9.30 மணி எனில் 4.30 மணிவரையும் பள்ளி செயல்பட
வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக் கொள்ள
வேண்டும்.வடகிழக்கு பருவமழை தொடங்கப் போகின்றது ஆகையால் பள்ளிகளில்
பழுதடைந்த கட்டிடத்தில் மாணவர்களை அமர வைப்பது,வகுப்பு நடத்துவது ,ஆசிரியர்
அறையாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பள்ளி வளாகத்தினை தூய்மை
நிறைந்ததாக தினந்தோறும் வைத்திருக்க வேண்டும்.பெற்றோர்கள் தடுப்பூசிகள்
எடுத்துக் கொள்ள மாணவர்கள் வழியாக அறிவுறுத்தப்பட வேண்டும்.விலையில்லா
நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க
வேண்டும்.அரசு,மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் பொழுது
சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது.கண்டிப்பாக தவிர்க்கப் பட
வேண்டும்.அக்டோபர் 2 ஆம் தேதி நாளை சனிக்கிழமை நடைபெறும் கிராம சபை
கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என
பேசினார்.
கூட்டத்திற்கு இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக
இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் அவர்கள் தொகுத்து
வழங்கியுள்ள விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்ப படிவங்களும் என்ற நூல்
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில்
இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு,அரசு உதவி பெறும் மற்றும்
சுயநிதி உயர்,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...