உயர்தொழில் நுட்ப ஆய்வகம் ( Hitech lab ) மற்றும் EMIS இல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல் :
அரசு உயர்நிலை நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரிகள் கவனத்திற்கு....
1. மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அரசு உயர்நிலை நிலை பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்திப் பள்ளியில் பயிலும் மாணவர்களைத் தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி / TAB எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவ மாணவியரைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும். தேர்வு நேரம் 60 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.
4.ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
5.காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.
6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால் ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 60 நிமிடத்திற்குள் முடிக்கும் படியாக இருத்தல் வேண்டும்.
7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் , Online refresh போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும். வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக்கூடாது.
8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள்.
* Hi - Tech Lab
* Computer lab
* மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop
* CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள்
* மேல்நிலை பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள்
* CRC , BRC களில் உள்ள System / laptop
* பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab
9 . இந்தத் தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரியமுறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும்.
10. இணைய இணைப்பு ( INTERNET ) மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
11. மதிப்பீட்டை http://exams.tnschools.gov.in Url மூலம் நடத்த வேண்டும்.
12. அந்த இணையத்தளத்தில் உள் நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID- ஐ login ID ஆக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு Password மாணவர்களின் EMIS ID ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்
உதாரணமாக- ஒரு மாணவரின்
EMIS ID 3390 **** 0400018 எனில் , அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான LOGIN ID , அதில் இறுதியாக உள்ள 0018 உடன் " @ " சேர்ந்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018 @ 2006 ஆகும்.
URL : http://exams.tnschools.gov.in
LOGIN ID. : 3390 **** 0400018
PASSWORD : 0018@2006
13. Login செய்து உள் நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும்.
14. மாணவரின் EMIS ID , பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளி கல்வித்துறை வழங்கிய மாணவர்களின் திறன் அடையாள அட்டையில் ( ID CARD ) உள்ளது அதனை பயன்படுத்திக் கொள்ள
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...