தேனி மாவட்டத்தில் அரசு
நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை வெளியிட வேண்டும் என, மாவட்ட
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் விபரம்:
தமிழகத்தில் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் பல இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெற்றோர்கள் பலர் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் விரும்பி சேர்த்து வருகின்றனர். அதே சமயம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை, பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...