மேலும் , மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல் , புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது . இதனைத் தொடர்ந்து , 3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து , அந்தந்தப் பாட ஆசிரியர்களை , மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட , ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி , தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...