Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.10.21

  திருக்குறள் :

அதிகாரம்:அறிவுடைமை

குறள் : 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

பழமொழி :

Don't judge a book by its cover.


புறத்தோற்றம் கண்டு ஏமாறாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.


2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.

பொன்மொழி :

நெருப்பை நாம் தான் பயன்படுத்த வேண்டும். அது நம்மைப் பயன்படுத்திக் கொள்ளும்படி விடக்கூடாது.----- கௌதம புத்தர்

பொது அறிவு :

1. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது? 

தேனீ.

 2. "பறவைத்தீவு" என அழைக்கப்படும் நாடு எது?

 நியூசிலாந்து.

English words & meanings :

Stationary - not moving. இயக்கம் இல்லாமல் இருப்பது. 

Stationery - writing materials. எழுத தேவையான பொருட்கள்

ஆரோக்ய வாழ்வு :

ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ள மிளகு !!




* மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதுகாரத்தன்மை கொண்ட மிளகில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.

 * செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி செரிமானப் பிரச்சினைகளை சரி செய்வதில் மிளகு முக்கிய பங்காற்றுகின்றது.

சளிஇருமல் பிரச்சனைகளால் அவதிபடுபவர்களுக்கு பாலில் மிளகுப்பொடியினைப் போட்டு குடித்தால் பிரச்சினை உடனடியாகத் தீரும்வறட்டு இருமலுக்கு முட்டையுடன் கூடுதலாக மிளகு சேர்த்து பொரித்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பிரச்சினை தீர்ந்து போகும்

 * மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்.

 * குழந்தைகள் சாப்பிடும் உணவில் மிளகாய் பொடிக்கு பதிலாக மிளகினை சேர்த்துவந்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமானதாக வளரும்நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட மிளகினை இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கணினி யுகம் :

Ctrl + Space - Select entire column 

Shift + Space - Select entire row

அக்டோபர் 21

ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் பிறந்தநாள்





ஆல்ஃபிரட் நோபெல் (About this soundAlfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம்சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremoஇத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

நீதிக்கதை

காக்கா கதை

முன் ஓர் ஊரில் ஒரு பாட்டி ஒரு மரத்தடியில் வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு காக்கா அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. வடையின் மணம் காக்காவின் மூக்கைத் துளைத்தது. எல்லோரும் வடையை வாங்கித் தின்றார்கள். காக்காவிற்கு வடை சாப்பிட மிகவும் ஆசை. 

பாட்டியிடம் காக்கா உனக்கு உதவியாக வேலை செய்கிறேன். ஒரு வடை தருவாயா? என்று கேட்டது. பாட்டி உன்னால் எனக்கு என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்டார். 

அடுப்பு எரிக்கக் காய்ந்த சுள்ளிவிறகு கொண்டுவந்துக் கொடுக்கிறேன் என்றது காக்கா. பாட்டி சரி என்றார். காக்கா பறந்து சென்று காட்டில் கிடந்த விறகுக் குச்சிகளை வாயில் கவ்வி எடுத்து வந்தது. இதுபோல பல முறை சென்று விறகுக் குச்சிகளைக் குவித்தது. பாட்டி மகிழ்ந்து போனார். 

இந்தா என்று ஒரு வடையை நீட்டினார் பாட்டி. காக்கா வடையை வாயில் கவ்விக் கொண்டு அதன் கூட்டிற்கு சென்றது. 

அந்தப் பக்கமாய் ஒரு நரி வந்தது. காக்கா வாயில் இருக்கும் வடையை நரி பார்த்து அந்த வடையைப் பறித்துக்கொள்ள நினைத்தது. உடனே அது காக்காவைப் புகழத் தொடங்கியது. 

காக்கா! ஆகா! எத்தனை அழகு நீ! உன் ஒருச்சாய்ந்த கண்ணும், கருகரு மேனியும்... அடடா! அழகே அழகு! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே, உன் இனிமையான குரலில் ஒரு பாட்டுப் பாடேன் என்று இதமாய்க் கேட்டது. 

புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும், வாயில் இருந்த வடையை மறந்து, கா, கா... எனப் பாடியதும் வடை கீழே விழுந்தது. நரியும் வடையைக் கவ்விக்கொண்டு ஓடியே சென்றுவிட்டது. காக்கா ஏமாந்துவிட்டது. 

நீதி :
ஏமாறுபர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

இன்றைய செய்திகள்

21.10.21

★தமிழகம் உலக நாகரிகத்தின் தொட்டில்- திருப்பத்தூர் அருகே சங்க காலத் தொல்லியல் சான்றுகள் கண்டெடுப்பு.

★தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்: சரணாலயமாக அறிவிக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.

★ராமநாதபுரம் மாவட்டத்தின் தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியை தொடர்ந்து, வடக்கே பாக் ஜலசந்தி கடல் நீரும் பச்சையாக மாறி சிறிய ரக மீன்கள் இறந்து கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளன.

★லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லை பகுதியிலும் சீன படைகள் குவிப்பு: பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தகவல்.

★ஜப்பானின் மவுண்ட் அசோ எரிமலை கரும்புகையுடன் வெடிக்கக் தொடங்கியுள்ளது.


★டி-20 உலகக்கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது நமீபியா.

Today's Headlines

 🌸 Tamil Nadu Cradle of World Civilization- Discovery of Sangam Archaeological Evidence Near Tirupatur.

 🌸Covey of Exotic birds came in Perunkulam, Thoothukudi district: Nature lovers request to declare it as a sanctuary.

 🌸 Following the Gulf of Mannar sea area in the south of Ramanathapuram district, the waters of the Bagh Strait in the north also have turned green and small species of fish are dying and beginning to recede.

 🌸 Chinese troops concentrate on Arunachal Pradesh border following Ladakh: Regional Army Commander Manoj Pandey

 🌸 Japan's Mount Aso volcano started to erupt with black smoke.


 🌸 T20 World Cup: Namibia beat the Netherlands by 6 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive