உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா் அடையாள அட்டையைத் தவிா்த்து ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தோ்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவா்கள் வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் காா்டு), தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...