TNPSC 82 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,19,500/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆகஸ்ட் மாத இறுதியில் Combined Geology Subordinate Service (CGSS) எனப்படும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு, உதவி அரசு வழக்கறிஞர் மற்றும் ITI Principal & Assistant Director of Training ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.09.2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்தப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில்
ஏற்பட்ட கொரோனா 2 ஆம் அலை காரணமாக,
4 மாதங்களுக்கு பின் மேற்கண்ட பணியிடங்களுக்கான
அறிவிப்புகள் வெளியாகின. இங்கு மொத்தம் 82 பணியிடங்கள்
காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க
விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது
Assistant Geologist பதவிக்கு
18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
ITI Principal & Assistant Director of Training பதவிக்கு 24 முதல்
30 க்குள் இருக்க வேண்டும். அரசு
வழக்கறிஞர் பதவிக்கு 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Assistant Public Prosecutor பதவிக்கு BL Degree, Assistant Geologist பதவிக்கு Degree/ M. Sc degree, ITI Principal & Assistant Director of Training பதவிக்கு Degree in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசில் வேலை தேடும் தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...