Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி?

 மின்னணு பணிப் பதிவேட்டை சரிபார்ப்பது (E - SR verification) செய்வது எப்படி?

முதலில் ஒரு அல்லது இரண்டு குயர் கோடு போட்ட பெரிய நோட்டு (Long Size) வாங்கிக் கொள்ள வேண்டும்.

தரமான தாள்களை கொண்ட பைண்டிங் நோட்டு வாங்குவது நல்லது. 
(Class mate நோட்டு சிறந்தது)


பிறகு மேற்கண்ட PDF file ல் உள்ளவாறு, நோட்டின் முதல் இரண்டு தாள்களில், தலைப்பு எழுதிக் கொள்ள வேண்டும்.பிறகு பணிப் பதிவேட்டுன் தொடக்கம் முதல் பக்கம் முதல், கடைசியாக பதிவு செய்யப் பட்ட பக்கம் வரையிலான பதிவுகளை, பணிப்பதிவேட்டில் உள்ளபடி, வரிசை மாறாமல், தற்போது வாங்கிய புதிய நோட்டில், உரிய தலைப்புகளுக்கு ஒதுக்கப் பட்ட பக்கங்களில், எழுத வேண்டும்.

அனைத்து தலைப்புகளிலும், பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்கள், நோட்டில் எழுதப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.

நம்மிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு, பணிப்பதிவேட்டில் அனைத்து விவரங்களும் இன்றைய தேதி வரை சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.

விடுப்புகள், ஊதிய உயர்வு, ஒப்படைப்பு விடுப்பு, இருப்பில் உள்ள ஈட்டிய விடுப்பு, முதல் பணி நியமனம், தகுதிகாண் பருவம் நிறைவு செய்தல், பதவி உயர்வுகள், பணியிட மாறுதல், பணி விடுவிப்பு & பணியில் சேர்ந்த விவரம், வாரிசு தாரர் நியமனம், குடும்ப விவரம், ஊதிய உயர்வுகள், ஊக்க ஊதியம், தேர்வு நிலை, சிறப்பு நிலை பதிவுகள், உயர் கல்விக்கான முன் அனுமதி, பின்னேற்பு, கல்வித் தகுதிகள், உண்மைத் தன்மை சான்றுகள், போராட்ட கால பதிவுகள் & முறை படுத்துதல் பதிவுகள், ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணய விவரம், பணிக்காலம் சரிபார்த்தல் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

நம் நோட்டில் உரிய தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விவரங்கள் அனைத்தும், மின்னணு பணிப் பதிவேட்டின் நகலில் உள்ளதா என்பதை கவனமாக சரி பார்க்க வேண்டும்.

தகவல்கள் ஏதேனும் பணிப் பதிவேடு அல்லது மின்னணு பணிப் பதிவேட்டில் முரண் பட்டாலோ, விடுபட்டிருந்தாலோ, அவற்றை தனியாக குறித்து, உரிய ஆவணங்களுடன் இவற்றை சரிசெய்ய உரிய எழுத்தர் மற்றும் அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

முரண் பட்ட அல்லது விடுபட்ட தகவல்கள் நம் பணிப்பதிவேடு மற்றும் மின்னணு பணிப் பதிவேட்டில் சரி செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சரி பார்த்த பின், அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.

E-.SR VERIFICATION -FORM-PDF




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive