மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை டிசம்பர் 16 முதல் ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மொழிகளில் நடக்கும் இந்த தேர்வு, கணினி வழியாக நடத்தப்படும். தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டங்கள், மொழிகள், தகுதி வரம்பு, தேர்வு கட்டணம், தேர்வு மையம், முக்கிய தேதிகள் ஆகிய விவரங்கள், ஒன்றிய தகுதி தேர்வு இணையதளமான //ctet.nic.in-ல் நாளை முதல் பதிவேற்றப்படும்.
தேர்வு எழுதுவோர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் அக்டோபர் 19ம் தேதி வரை ஏற்கப்படும். தேர்வு கட்டணத்தை அக்டோபர் 20ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...