ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையத் தலைமையிடமாக தெரிவு செய்து அக்குறுவளமையப் பகுதிக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பொறுப்பானவராக நியமனம் செய்து அம்மையப் பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி அந்தந்த பகுதிக்குட்பட்ட பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் கல்வித் தரம் உயர்த்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் செயல்படவும் பிற பணிகளை செயல்டுத்திடவும் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி , அனைத்து வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1 . குறுவள மைய தலைமைப் பள்ளியில் 06.09.2021 முதல் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவள மைய பள்ளியில் இருந்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது . ஆசிரியர் பயிற்றுநர்களின் வருகைப் பதிவேடு , நகர்வுப் பதிவேடு ( Movement Register ) தினந்தோறும் பதிவு செய்யப்பட வேண்டும்.
2. குறுவள மையத்திற்கு பொறுப்பான ஆசிரியர் பயிற்றுநர்கள் தாங்கள் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டிய முகாம் பணி விவரங்கள் ( Tentative ) குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியரிடம் உள்ள முகாம் பதிவேட்டில் வாரத்தின் முதல் நாளில் பதியப்பட வேண்டும்.
3. பள்ளிப் பார்வை இறைவணக்கக் கூட்டத்திலிருந்து அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
4. குறுவள மையத்திற்குட்பட்ட அருகாமையில் உள்ள பள்ளிகளை பார்வையிட்ட பிறகு அன்றைய தினத்திலும் தொலைவில் உள்ள பள்ளிகளை பார்வையிட்ட பிறகு மறுநாளும் பள்ளியின் அனைத்து செயல்பாடுகள் குறித்து குறுவளமைய தலைமை ஆசிரியரிடம் விரிவாக எடுத்துரைத்து ஆலோசனைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
5. வாரம் முடிந்தப் பின்னர் வார இறுதி நாளன்று குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முகாம் விவரம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாடு மற்றும் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுகளின் முன்னேற்றம் , துறை சார்ந்த அனைத்து உட்கூறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.
6. 15 நாட்களுக்கு ஒரு முறையேனும் குறுவளமைய அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து மீளாய்வுக் கூட்டம் குறு வளமைய தலைமையிடப் பள்ளியில் குறுவளமைய தலைமை ஆசிரியரால் நடத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
7. மீளாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை சரியான குறிப்புகளுடன் மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும்.
8. ஒவ்வொரு மாத இறுதியிலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொண்ட முகாம் பணிகளின் Actuall Diary விவரங்கள் குறுவளமைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளருக்கு தவறாமல் அனுப்பி வைத்தல் வேண்டும்.
9. மாத இறுதியில் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் இருந்து பெறப்பட்ட குறுவளமைய முகாம் பணிகள் சார்ந்து Actual Diary விவரங்கள் மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு முகப்புக் கடிதத்துடன் ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுவதை அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
10. குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் விடுப்பு எடுக்க நேரிடின் விடுப்புக் கடிதத்தினை குறுவளமைய தலைமையாசிரியரிடம் அளித்து ஒப்புதல் பெற்று , ஒன்றை அப்பள்ளியிலும் மற்றொன்றை வட்டார வளமைய மேற்பார்வையாளருக்கும் அனுப்புதல் வேண்டும்.
Duties of the CRC HM
* அரசாணை எண் : 145 / DSE / நாள் : 20.08.2020 - ன்படி ஒரே வளாகத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் , அவ்வளாகத்திற்குள் உள்ள அரசு / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , பள்ளிக் கல்வி இயக்குநர் & தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் அரசாணை எண் . 202 / DSE / நாள் : 11.11.2019 - ன்படி குறுவள தலைமை ஆசிரியர்களுக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
* மாவட்டக் கல்வி அலுவலருக்கு இணையான தகுதி உடைய அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குறுவள மையத்தில் தலைமைப்பணிகளை ஆசிரியர் பயிற்றுநருடன் இணைந்து அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிட்டு கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் , கற்பித்தல் பணிகளை மேம்படுத்த வழிகாட்டுதல் , குறைகள் கண்டறியப்பட்டால் உயர் அலுவலர்களிடம் முறையாக தெரிவித்து குறைகளை களைவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் , கட்டிடப் பணிகள் தேவை இருப்பின் உயர் அலுவலர்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வசதிகளை அப்பள்ளிகளுக்கு ஏற்படுத்துதல் , குறுவளமைய ஆசிரியர்களின் விடுப்பின்பொழுதும் , பயிற்சி காலத்தின் பொழுது பதிலி ஆசிரியர்களை அப்பள்ளிக்கு நியமிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு வார இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாடத்தினையும் , பாடம் முடிக்கப்பட்ட விவரத்தையும் அதனால் ஒவ்வொரு மாணவனும் பெற்ற கற்றல் விளைவுகளையும் , கற்றல் விளைவுகளை மேம்படுத்த ஆசிரியர் மேற்கொண்ட உத்திகளையும் விவாதிக்க வேண்டும் . மேலும் , குறுவளமைய தலைமைப் பள்ளி , அனைத்து பள்ளிகளுக்கும் முன்மாதிரி பள்ளியாக இருக்க வேண்டும் .
Watch Register
* குறுவள மைய அளவில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பதிவேடு ( Watch Register ) முறையாக பயன்படுத்தப்படுத்த வேண்டும். இதில் பள்ளியின் முக்கிய கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் பிற பணிகளும் உள்ளடக்கியதாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் .
கண்காணிப்பு பதிவேட்டில்
1. ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்பேடு ( Notes of Lesson )
2. வகுப்பு வாரியான பாட வாரியான குறிப்பேடு
Class work
• Homework / Assignment
*Composition ( both Tamil & English )
• Handwriting ( both Tamil & English )
• Graph Note o Geometry Note
• Map Drawing Note Test Papers ( Weekly Assesment )
*Mark Register
*Student Attendance ( Monthly Closure )
மேற்கண்ட குறிப்பேடுகளும் , பாடசெயல்பாடுகள் சார்ந்த இதரக் குறிப்பேடுகளும் மாதம் ஒரு முறையேனும் மீளாய்வு ( Review ) செய்ய வேண்டும்.
3. உள்ளடங்கிய அல்லது சிறப்பு தேவை உள்ள குழந்தைகளின் ( IE or CWSN Children ) கல்வி மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி பற்றிய முன்னேற்றத்தையும் சிறப்பு பயிற்றுநருடன் ஒருங்கிணைந்து விவாதிக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் ஒரு முறை அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து மீளாய்வு கூட்டத்தை தலைமை ஆசிரியர் நடத்த வேண்டும் . அதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை குறுவளமையங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைத்து மீளாய்வு கூட்டத்தை குறுவள மையத் தலைமை ஆசிரியர் நடத்த வேண்டும் . இக்கூட்டத்தில் பள்ளிச் செயல்பாடுகள் அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு , ஆய்வகப் பராமரிப்பு மற்றும் பயன்பாடு , Hi - Tech Lab & Smartclass room பயன்பாடு , இடைநின்றோர் மாணவர்கள் , இடைநின்றோர் மாற்றுத்திறன் மாணவர்கள் , Irregular Students , நலத்திட்ட உதவி பெறாத மாணவர்கள் , பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் , Safety and Security சார்ந்த பணிகள் மற்றும் பள்ளி இணைச் செயல்பாடுகள் , பள்ளி வளாகம் , வகுப்பறைகள் தூய்மையாகப் பராமரித்தல் , குடிநீர் குழாய் பயன்பாடு , கழிவறைகள் பயன்பாடு மற்றும் பிற பணிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கி , பள்ளியை நிர்வகிப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
* குறுவள மைய தலைமை ஆசிரியர் என்ற முறையில் அக்குறுவளமையம் குறித்து அனைத்து தகவல்களையும் ஆசிரியர் பயிற்றுநருடன் ஒருங்கிணைந்து பள்ளிகளின் எண்ணிக்கை ( தனியார் பள்ளிகள் உட்பட ) பள்ளி வாரியாக மாணவர் , ஆசிரியர் எண்ணிக்கை , EMIS விவரங்கள் , பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் விவரம் , உள் கட்டமைப்பு வசதிகள் , இடைநின்ற மாணவர்கள் , சேர்க்கை விவரங்கள் , மாற்றுத்திறன் கொண்ட மாணவர் விவரங்கள் , நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட , வழங்கப்படாத மாணவர் விவரம் , பள்ளிகளின் சிறப்பு செயல்பாடுகள் , குறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட முழுமையான CRC Profile தொகுத்து வைத்திருக்க வேண்டும் . இப்பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் பயிற்றுநருக்கு கணினி வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
* குறுவள மையத்திற்குரிய ஆசிரியர் பயிற்றுநர்கள் குறுவளமைய தலைமைப் பள்ளிகளில் தங்களின் வருகைப் பதிவேட்டையும் , இயக்கப் பதிவேட்டையும் முறையாக பராமரிக்க வேண்டும். வட்டார வள மையங்களுக்கு , தினசரி முகாம் மற்றும் விடுமுறை விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். மேலும் , ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநருக்கும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ள உட்கூறுகளை ஒன்றிய அளவில் தொகுத்து வழங்கும் பணிகளையும் அவர் உட்கூறு பணியை மேற்கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர் குறுவள மையத்தில் இருந்தே விவரங்களை தொகுத்து மேற்பார்வையாளர் சரிபார்த்தபின் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் போதிக்கும் ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடங்கள் சார்ந்து நடத்தி முடிக்கப்பட்ட விவரங்களையும் , மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடக் குறிப்பேடுகள் பயிற்சி ( Classwork , Homework , Composition , Graph etc. , ) , ஒப்படைவுகள் , மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும்.
மேலும் பள்ளியில் வார இறுதி கூட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு மேம்பட மேற்கொள்ள குறைதீர் கற்பித்தல் உத்திகளை விவாதிக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாத இறுதியிலும் கல்வி மாவட்ட அளவில் , மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொ ) , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர் , சிறப்பு பயிற்றுநர்கள் , வட்டார பொறியாளர்கள் , வட்டாரக் கணக்காளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்களுடன் இணைந்து குறுவள மையங்களில் நடைபெறும் கல்விச் செயல்பாடுகளை முழுமையாக விவாதித்து BRC - Review Meeting Register- ல் பதிவு செய்து நகல் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
CCE
* பள்ளிகளை ஆய்வு செய்யும் பொழுது சில பள்ளிகளில் 1 - 8 வகுப்புகளில் CCE- ல் தொகுத்தறி மதிப்பீட்டில் ( Summative Assesment ) - ல் 60 - மதிப்பெண்களுக்கு 50 ( அ ) 40 மதிப்பெண் ( A / B Grade ) எடுத்த மாணவர்கள் ஒருவரும் இல்லாத நிலை ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் இருப்பதாக தெரிகிறது. இவற்றை ஆழமாக கவனித்து மீளாய்வின் பொழுது விவாதிக்க வேண்டும். குறுவள மையத்தில் நடைபெறும் மீளாய்வின் பொழுது சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் சிறப்பான கற்பித்தல் உத்திகளைக் ( English Cursive Handwriting , Tamil Handwriting , TLM , IT Technology used in classroom & etc. , ) கொண்டு வகுப்பறையில் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக கற்பித்தல் பணியை செய்து வருகின்றனர்.
இதனை மற்ற பள்ளிகளுக்கும் எடுத்துக் கூறி கற்றல் கற்பித்தல் பணி வலுப்பெறுவதற்கும் , சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுவதற்கும் குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
எனவே , இக்குறையை களைவதற்கு ஆசிரியர்கள் மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் அதிக கவனம் செலுத்தி சிறிய வகுப்புகளிலிருந்தே அதிக எண்ணிக்கையில் Toppers மாணவர்களை உருவாக்க ஏதுவான வழிமுறைகளை வழங்க வேண்டும் . இருப்பினும் வகுப்பில் உள்ள மீத்திறன் கொண்டோர் , சராசரி மற்றும் மெல்ல கற்போர் என அனைத்து மாணவர்களின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் முன்பே அறிந்து அவர்களுக்கேற்ப கற்பித்தல் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு வகுப்பறையை நிர்வகிக்க வேண்டும் . அதிக எண்ணிக்கையில் மீத்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கும் பொழுது உயர் வகுப்புகளில் NMMS / NTSE / TRUST | NEET போன்ற தேர்வுகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்க முடியும்.
மருத்துவப் படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளதைப் பயன்படுத்தி நம் மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் NEET- தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் ஊக்கப்படுத்தியும் , மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தும் மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
Twinning , RAA போன்ற செயல்பாடுகள் மூலம் சிறந்த கற்றல் செயல்பாடுகள் , ஆய்வகங்கள் , கணினி வசதிகள் அனைத்துப் பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* பள்ளியில் இடைநின்ற மாணவர் விவரங்கள் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு , அம்மாணவர்களுக்கு ஏற்றார்போல் NRSTC / Regular School -ல் சேர்க்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்விவரங்கள் குறுவள மையத்தில் நடைபெறும் அனைத்து பள்ளிகள் கூட்டத்தின் மீளாய்வின் பொழுது விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் , ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாத இறுதியில் மாணவர் வருகைப் பதிவை முடிக்கும் பொழுது பள்ளி தலைமை ஆசிரியர் முழு கவனத்துடன் அனைத்து வகுப்பு மாணவர்களின் வருகையையும் உறுதி செய்து பதிவேட்டினை முடிக்க வேடும்.
அரசாணை எண் .10 DSE / நாள் : 11.01.2017 - ன்படி ஒரு மாணவர் தொடர்ந்து ஒரு வார காலம் பள்ளிக்கு வருகை புரியவில்லை எனில் வகுப்பாசிரியர் மாணவரின்பெற்றோரை சந்தித்து விவரங்களை பெற்று பள்ளிக்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து வரவில்லை எனில் தலைமை ஆசிரியரை அணுகி பெற்றோருக்கு தெரிவித்து மாணவர் பள்ளிக்கு வருவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மூன்று வாரம் வரவில்லை எனில் SMC உறுப்பினர்களுடட்ன கலந்துரையாடி பெற்றோரை அணுகி பள்ளியில் தொடர்ந்து பயில்வதற்கு ஆவன செய்ய வேண்டும். நான்கு வாரம் தொடர்ந்து வரவில்லை எனில் ( Potential Droupout என கருதி ) ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்களில் ( NRSTC ) கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வழிமுறைகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பதிவேடு பராமரித்தலை உறுதி செய்தல் வேண்டும்.
ASSESMENT :
PA / SLAS / NAS :
* PA - Periodical Assesment மூலம் குறுவளமையத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் வகுப்பு வாரியாக தமிழ் , ஆங்கிலம் வாசித்தல் , எழுதுதல் திறன் மற்றும் கணித அடிப்படைத் திறன்களை பெற்றுள்ள மாணவர்கள் A / B / C / D தரம் வாரியாக தொகுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் , C & D தரத்தில் உள்ள மாணவர்கள் விவரங்களையும் அவர்களை மேம்படுத்துவதற்காக ( Action Plan ) ) மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பள்ளி அளவிலும் மற்றும் CRC Profile- லும் இருக்க வேண்டும். Assignment and Assesment ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்ட பாடப்பகுதியில் அவ்வார இறுதியில் அப்பாடத்தில் உள்ள ஒப்படைவு ( Assisgnment ) தரப்பட வேண்டும்.
மேலும் , ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்ட பாடப்பகுதியில் கற்றல் விளைவுகள் பெற்றுள்ளதை மதிப்பீடு செய்யும் பொருட்டு ஆசிரியர்கள் தாமாக தயாரித்த Work Sheet கொண்டு மற்றும் பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களை கொண்டு அவ்வார இறுதியில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
SCHOOL SAFETY & SECURITY :
NDMA - National Disaster Management Agency- ல் மூலம் School Safety Policy - 2016 வழங்கப்பட்டது . பள்ளி கட்டிட உறுதி நிலைப்புத் தன்மை , சுற்றுச்சுவர் ஆகியவை கொண்ட Structural Safety பாதுகாப்பு நடவடிக்கைகள் , நீட்டிக் கொண்டுள்ள ஆணிகள் , தேவையற்ற மின் இணைப்பு கம்பிகள் , மூடப்படாத கிணறுகள் ஆகியவை அடங்கிய Non Structural Safety Measures பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக கட்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி பாதுகாப்பு ( School Safety ) பள்ளி அவசர கால வெளியேற்றம் ( School Evacuation ) குறித்த திட்டமிடல் , தீயணைப்புத் துறையிடமிருந்து பாதுகாப்பிற்கான தடையின்மைச் சான்று , ஆண்டிற்கு ஒரு முறை தீயணைப்பு துறையினர் மூலம் பயிற்சி அளித்தல் , பொதுப்பணித்துறை ( PWD ) பொறியாளரை அணுகி கட்டிடத்தின் நிலைப்புத் தன்மைக்கான சான்றிதழ் பெறுதல் , மின் இணைப்புகளை சரி பார்த்து ஆண்டாய்வுச் சான்று பெறுதல் , தன் சுத்தம் , சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்தல் உள்ளிட்ட அனைத்து பள்ளி பாதுகாப்பு ஆவணங்களையும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு சான்றிதழ்களை பெற்று பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் . மேலும் , NCPCR ( National Commission for Protection of Child Rights ) - ல் வெளியிடப்பட்ட பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு ( Manual of Safety and Security of Children in Schools ) மூலம் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் , குழந்தைகள் / பெண்கள் பாதுகாப்பு சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இக்கட்டகங்களை துணையாகக் கொண்டு தலைமையாசிரியர்கள் பள்ளியின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் , School Safety Plan தயாரிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் கூட்டப்படும் ஆசிரியர்களுக்கான கூட்டத்திலும் , குறுவளமைய மீளாய்வுக் கூட்டத்திலும் School Safety & Security சார்ந்து கண்டிப்பாக Agenda- இடம்பெற வேண்டும்.
சுற்றுச்சுவர் இல்லாத ஊட்டுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பொருட்டு BDO / BRC / MPLADS / MLACDS / CSR ஆகியவற்றின் மூலம் உரிய அலுவலர்களுக்கு அப்பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக கடிதம் வழங்கி உரிய உதவிகளைப் பெற்று பள்ளி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் பள்ளி கட்டிடங்களின் மேற்கூரைகளில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பதை உறுதி செய்வதுடன் , மேலும் தளத்தில் படிந்திருக்கும் இலைகள் , குப்பைகள் , செடிகளை அப்புறப்படுத்தி , கட்டிடம் பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண் பணியாளர்கள் அதிகம் பணிபுரியும் பள்ளிகள் / அலுவலகங்களில் விசாகா கமிட்டி வழிகாட்டுதலின்படி புகார் குழு அமைத்திருக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர் ஒழுங்குமுறை குழுமம் அமைத்து மாணவர்களின் பழக்க வழக்கங்களை நெறிமுறைப்படுத்த வேண்டும்.
CIVIL WORKS :
* ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் கூட்டத்திலும் பள்ளி பாதுகாப்பு சார்ந்தும் , பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்துவது சார்ந்ததும் விவாதிக்க வேண்டும் .
* SMC தீர்மானப் பதிவேட்டில் கட்டிடப்பணி / பிறப்பணி / பள்ளி மானியம் ஆகியவைகளுக்கு வழங்கப்படும் தொகைக்கான செலவினம் குறித்த முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதையும் , செலவினம் மேற்கொண்டதற்கான இரசீதுகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் , அதற்கான வரவு செலவு கணக்கு புத்தகம் எழுதப்பட்டுள்ளதா என்பதையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் | SMC கணக்காளர்கள் உதவியுடனும் / பள்ளி கட்டடங்கள் மற்றும் கட்டடப்பணி சார்ந்து வட்டாரப் பொறியாளர் உதவியுடன் குறுவளமைய தலைமை ஆசிரியர் மீளாய்வு மேற்கொள்ள வேண்டும்.
* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ( Samagra Shiksha ) மூலம் வழங்கப்படும் பணிகளுடன் சமுதாயப் பங்களிப்பு | SMC பங்களிப்பு / பழைய மாணவர் சங்க பங்களிப்பு நிதியைக் கொண்டு மேலும் பணிகளை விரிவுபடுத்தி மேற்கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும் , மேலும் RMSA மூலம் வழங்கப்படும் கட்டிடப் பணிகள் PWD மூலம் கட்டடப்பட்டாலும் அவற்றையும் வட்டார பொறியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட வேண்டும்.
EMIS :
* EMIS - தளத்தில் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் மாணவர் விவரம் , சிறப்பு தேவை உள்ள மாணவர் விவரம் , ஆசிரியர் விவரம் , உள் கட்டமைப்பு விவரம் , நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரம் , பழுதடைந்த / இடிக்கப்பட்ட கட்டிடங்கள் / கழிவறைகள் விவரம் , கணினிகள் பயன்பாட்டில் உள்ள விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் Update செய்து வைத்திருக்க வேண்டும் . பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் அன்றைய நிலவரப்படி புதுப்பித்திருக்க வேண்டும்.
* கூடுதல் கட்டிடங்கள் , கழிவறைகள் / குடிநீர் / சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் EMIS -பதிவேட்டின்படி மாநிலத்திலிருந்து பள்ளிகள் தெரிவு செய்யப்படுவதால் , இவ்விவரங்களை சரியாக UDISE + மற்றும் EMIS -இல் update செய்ய வேண்டும் . அதே போல ACR / Toilet / Drinking water / Compound wall / CWSN Toilet / Ramp | Major Repair பணிகள் முடிக்கப்பட்ட உடன் அவ்விரவத்தையும் EMIS- இல் update செய்ய வேண்டும்.
* RTE- சட்டத்தின்படி தற்போது தனியார் பள்ளிகளிலிருந்து வந்துள்ள மாணவர்களுக்கு அரசு பள்ளியில் சேர்க்கை வழங்கினாலும் , அம்மாணவரது மாற்றுச்சான்றிதழ் / EMIS Unique Number பெறுவது கட்டாயம் என்ற அடிப்படையில் , அம்மாணவர்களுடையை பெற்றோர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் பெற்று வழங்கக் கோரி கடிதத்தை தனியார் பள்ளிகளுக்கு எழுத வேண்டி அறிவுறுத்த வேண்டும்.
பெற்றோர் தனியார் பள்ளியிடம் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கடிதம் வழங்கியதை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனியார் பள்ளிக்கு மாணவரின் TC மற்றும் EMIS Number வழங்கக் கோரியும் , மாணவரின் நிலுவைத் தொகை இருப்பின் பெற்றோரை அணுகவும் , மாணவரின் கற்பித்தல் பணிக்கு உதவியாக இருக்குமாறு கடிதம் எழுதி அவ்விவரங்களை பெற வேண்டும் . அவ்வாறு கடிதம் எழுதிய பிறகும் எந்த விவரங்களும் கிடைக்க பெறவில்லை எனில் , அப்பள்ளிகளை ஒன்றியம் வாரியாக தொகுத்து மாவட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Training
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ( Samagra Shiksha ) மூலம் & மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( SCERT ) மூலமும் இக்கல்வியாண்டில் ( 2021-2022 ) வழங்கப்பட்டு வரும் ICT பயிற்சியில் வழங்கப்பட்ட கருத்துக்கள் பள்ளி அளவிலும் , குறுவளமைய அளவிலும் விவாதித்து நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
New School Proposal | Up gradation :
* 1km , 3km , 5km தொலைவிற்குட்பட்ட நடைமுறைக்கு மேல் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகவும் , நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் , உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் உயர்த்துவதற்கு தேவையான விவரங்களையும் , புதிய தொடக்க பள்ளிகள் துவங்குவதற்கு ஏதுவான அனைத்து விதிமுறைகள் கொண்ட பள்ளிகளையும் கண்டறிந்து உரிய படிவத்தையும் , விவரங்களையும் பூர்த்தி செய்து குறுவளமைய தலைமை ஆசிரியர் மூலம் பெற்று மேற்பார்வையாளர் ( பொ ) மாவட்டத்திட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Transport / Escort :
* கரடுமுரடான சாலை வசதி இல்லாத GIS Mapping -இல் Uncovered Habitation இல் உள்ள மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கும் , வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வரவும் , மாணவர்களை அழைத்துச் செல்லும் வகையில் 5 மாணவர்களுக்கு ஒரு பாதுகாவலர் என்ற நிலையில் நியமிக்கப்பட்டு அதற்குரிய செலவினம் மற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு வரைவு திட்டத்தில் TA Escort தேவைப்படும் மாணவர்கள் விவரத்தை குறுவளமைய அளவில் தொகுத்து வட்டார வள மையத்திலிருந்து மாவட்டத்திட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...