தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தொழில்நுட்பத் தேர்வுகள் செப்.16 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்ததுடன் அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டது. தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இதற்கிடையே, தேர்வு மையங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான லட்சுமி பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை
தேர்வுக்கு வரும் மாணவர்கள், தேர்வு அதிகாரிகள், அனைவரும் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்டமுகக்கவசம் அணிந்து வரவேண்டும். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
உடல்வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அத்தகைய தேர்வர்களுக்கு தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...