கேரளாவில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளாவில் நிபா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட 11 பேருக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தற்போதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில் 51-ஆக அதிகரித்துள்ளது.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் முதன்முதலில் 1990ம் ஆண்டு மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில், 2001-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மேலும் அப்போது, இந்த வைரஸ் பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் 2018-ல் கண்டறியப்பட்டது. அதிலும் ஆபத்தான செய்தி என்னவென்றால், இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40-80 சதவிகிதமாக இருக்கிறது. மற்றும் இக்குபேஷன் காலம் இரண்டு வாரங்கள் ஆகும்.
இந்த செய்தியையும் படிங்க...
கொரோனா பாதிப்புக்கு மேலும் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை !!
நிபா வைரஸை விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனோடிக் வைரஸ் என்று குறிப்பிடலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர இந்த வைரஸ் அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது மனிதர்களின் நேரடி தொடர்பு மூலமாகவும் பரவும் என்று கூறப்படுகிறது. இந்த நோய் குறிப்பாக பழம் திண்ணும் வெளவால்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளைக்காய்ச்சல் போன்ற தீவிர பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த வைரஸ் காற்று மூலம் பரவும் வைரஸ் அல்ல என்றும், இது வெளவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்து பரவுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மிக ஆபத்தானது.
நிபா வைரஸின் பொதுவான அறிகுறிகள்
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் உண்டாகும் அறிகுறிகள் கொரோனா வைரஸால் ஏற்படும் அறிகுறிகளை போன்றே இருக்கும். இது
இருமல்,
தொண்டை புண்,
தலைசுற்றல்,
மயக்கம்,
தசை வலி,
சோர்வு மற்றும்
மூளையில் வீக்கம் (மூளையழற்சி),
தலைவலி,
கடுமையான கழுத்து வலி,
மன குழப்பம்,
வலிப்பு மற்றும்
ஒளியின் உணர்திறன்
ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். மேலும் இந்த வைரஸால் ஒரு நபர் மயக்கமடையக்கூடும். இறுதியில் இவை மரணத்திற்கு வழிவகுக்கும்.
சிகிச்சை முறைகள் என்ன?
இந்த வைரசுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் நீங்கள் மேற்கண்ட அறிகுறிகளை அனுபவித்தால், உடனடியாக ஆர்டி-பிசிஆர், செரிப்ரோஸ்பைனல் திரவம், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் நோயறிதலை உறுதிப்படுத்தும் மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க...
நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் என்னென்ன..??
பின்னர், வைரஸில் இருந்து குணமடைந்த பிறகு, ஆன்டிபாடிகளுக்கான சோதனை நடத்தப்படுகிறது. மூளையழற்சி மற்றும் பிற அறிகுறிகளைக் கவனிப்பதற்காக சில மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அவை ஆபத்தை அதிகரிக்கலாம் மற்றும் நிலைமையை மோசமாக்கலாம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
முக்கியமாக மரத்தில் இருந்து தரையில் விழுந்த பழங்களை சாப்பிடாதீர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். இந்த வைரஸை எதிர்த்து போராட தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பழ வெளவால்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இதுதவிர தெரு விலங்குகளை தொடுவதையும் அல்லது அதற்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...