எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் பலரும் பின்பற்றும் டயட் முறையாக மாறி இருக்கிறது பேலியோ டயட்.
இதை சுருக்கமாக சொன்னால் முள்ளை முள்ளால் எடுக்கும் முறை தான். உடல் எடை கொழுப்பால் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். உடல் எடையை குறைக்க பேலியோலிதிக் காலத்தில் (பழைய கற்காலத்தில்) 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் சாப்பிடுவதைப் போன்ற கொழுப்பு மிக்க உணவுகளை உட்கொள்வதை உள்ளடக்கிய ஒரு டயட் திட்டம் தான் பேலியோ டயட்.
கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகளை அடியோடு தவிர்ப்பது தான் இந்த டயட்டின் அடிப்படை. மேலும் இந்த டயட்டின் போது பெரும்பாலும் கொழுப்பை மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
உடலில் கொழுப்பு சேர கார்போஹைட்ரேட்கள் காரணமாகின்றன. அதை முழுவதும் தவிர்க்கும் போது ஆட்டோமேட்டிக்காக நம் உடல் அதை தேடும். அப்போது ஏற்கனவே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எரிக்கப்படுகிறது. அதே சமயம் நாம் இந்த டயட்டின் போது எடுத்து கொள்ளும் நேரடி கொழுப்பு உணவுகள் மூலம் உடல் எடை அதிகரிக்காதா என்ற கேள்வி எழுகிறதல்லவா.? அதற்கான பதில் அந்த உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பு தினசரி ஆற்றலுக்கு தேவையான சக்தியாக மாற்றப்பட்டு எரிக்கப்பட்டு விடும். முந்தைய கற்காலத்தில் வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பதன் மூலம் பெறப்பட்ட உணவுகளான மீன், குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், சீட்ஸ் மற்றும் நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது இந்த டயட்டில் அடங்கும். இந்த பேலியோ டயட் முறையை பின்பற்றுவது கணிசமான எடை இழப்புக்கு உதவும் மற்றும் கலோரிகளை குறைக்காமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டயட்டின் நோக்கம்:
நம் உடலானது வேளாண் நடைமுறைகளுடன் தோன்றிய நவீன உணவோடு மரபணு ரீதியாக பொருந்தவில்லை. இதனால் தான் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் தற்போது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே இவற்றை தவிர்க்க பண்டைய கால மனிதர்கள் சாப்பிட்டவற்றை தற்காலத்தில் நாம் மீண்டும் சாப்பிட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த டயட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டயட்டின் அடிப்படை விதியில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் எதையும் உட்கொள்ளக்கூடாது என்பதும் அடங்கும்.
பேலியோ டயட்டின் போது சாப்பிட கூடியவை:
* இறைச்சிகளில் ஆட்டிறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
* மீன் மற்றும் கடல் உணவில் ட்ரவுட், சால்மன், இறால்
* ஃப்ரீ-ரேஞ்ச் அல்லது ஒமேகா -3 செறிவூட்டப்பட்ட முட்டைகள்
* ப்ரோக்கோலி, காலே, வெங்காயம், கேரட், மிளகு மற்றும் தக்காளி, உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, டர்னிப்ஸ்
* ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், பேரீச்சம்பழம், ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி
* பாதாம், அக்ரூட் பருப்புகள், ஹேசல்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள்
* எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், அவகோடா ஆயில், கடல் உப்பு, பூண்டு, ரோஸ்மேரி மற்றும் மஞ்சள்
சாப்பிட கூடாதவை:
* குளிர்பானங்கள், பழச்சாறுகள், மிட்டாய், ஐஸ்கிரீம்கள் மற்றும் பேஸ்ட்ரிகள்
* ரொட்டி, பாஸ்தா கோதுமை, கம்பு, பார்லி
* பீன்ஸ், பயறு மற்றும் பிற பருப்பு வகைகள்
* சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி விதை எண்ணெய்
* செயற்கை இனிப்புகள் மற்றும் செயற்கை உணவு மாற்றங்களை உள்ளடக்கிய அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் எப்போதாவது டீ மற்றும் காஃபி குடிக்கலாம். என்றால் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற நன்மை தரும் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. அதிலும் கிரீன் டீ சிறந்ததாக கருதப்படுகிறது. ஆரோக்கிய நன்மைகள் காணப்படும் காஃபியிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...