பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டதால் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிள்ளைகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இது
ஒரு புறம் இருக்க, மற்ற வகுப்பினருக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு
நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும்
எழுந்துள்ளது. இதனை அடுத்து தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
நிருபர்களுக்கு இது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர்
கூறியதாவது, ‘பள்ளிகள் திறப்பு பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம்
தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் பள்ளிகள்
திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்தும் அனைவரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கூடிய விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவினை தெரிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளை முழுமையாக திறக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...