தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் இன்று 18-9-21 சனிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் பணியாளர்கள் நலன் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்து கோரிக்கை ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
அதுபோலவே அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்கள் பங்கேற்று பணி சார்ந்த கோரிக்கை குறித்து பேசினார்கள்.
அப்போது பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளும் வலியுறுத்தினார்கள்.
இதில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை பள்ளிக்கல்வி அமைச்சரிடம் கொடுத்து கோரிக்கை நிறைவேற்ற கேட்டு கொண்டார்.
இங்கனம் :
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...