Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிஇ, பி.டெக் கவுன்சலிங் அட்டவணை வெளியீடு

பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி வரை 4 கட்டமாக நடக்கும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் உள்பட பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், 1 லட்சத்து 74  ஆயிரம் மாணவ- மாணவியர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 2,722 பேர் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்யவில்லை. இது தவிர தகுதியில்லாத விண்ணப்பங்கள் 3,290 நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவை போக தகுதியானவை என்று வகையில் 1 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 1  லட்சத்து 36 ஆ யிரத்து 973 பேர் கலந்து கொள்ள வேண்டிய கவுன்சலிங் அட்டவணையைதொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

* தரவரிசைப் பட்டியலின்படி 1 முதல் 14ஆயிரத்து 788 வரை எண்ணிட்டவர்கள் செப்டம்பர் 27ம் தேதி  முதல் அக்டோபர் 5ம் தேதி வரை முதல் சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும்.

* அடுத்ததாக 14789 முதல் 45227 எண்வரை அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 2ம் சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும்.

* 42228 மு தல் 86228 வரை உள்ளவர்கள் அக்டோபர் 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும் 3வது சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும்.

* 86119 முதல் 136973 வரை உள்ளவர்கள் அக்டோபர் 9ம் தேதி மு தல் அக்டோபர் 17ம் தேதி வரை நடக்கும் 4வது சுற்று கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive