பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை
பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது கரோனா தொற்று பாதுகாப்பு உறுதி மொழியை மாணவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டனர்.மாணவர்கள் மகிழ்ச்சிஇதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களிடம் பேசினேன். மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்தப் பள்ளி வரலாற்று சிறப்பு மிக்க பள்ளியாக உள்ளது. இங்குள்ள தொன்மை வாய்ந்த கட்டடம் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நிதி ஒதுக்கவும், பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்.
சட்டப்பேரவை, நாடளுமன்ற உறுப்பினர்களின் நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மைப்பணி, கட்டுமானப் பணி போன்றவற்றை மேற்காெள்ள முதலமைச்சரிடம் எடுத்துக் கூற உள்ளோம்.பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லைவருகை கண்காணிப்புபள்ளிகளில் முதல் வாரம் மாணவர்கள் வருகையை கண்காணிக்க உள்ளோம். மாணவர்களை மனரீதியாக தயார்படுத்தும் வகையில் 45 தினங்களுக்கு புத்துணர்வு வகுப்புகளை மட்டுமே ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.கரோனா காலகட்டத்தில் பள்ளி கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவிப்பது குறித்து உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லைபொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது. தற்போது இருக்கின்ற வினாத்தாள் நடைமுறையே தொடரும். மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...