அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க திட்டமிடப்பட்டது. இரண்டு கட்ட பயிற்சிகள் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக வழங்கப்பட்டது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் 6.9.21 முதல் 9.9.21 வரை மற்றும் 11.9.21 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பொதுவாக கல்வி பயிலும் மாணவர்களில் கற்றலில் குறைபாடு ( Specific Learning Disability - Eg . Dyslexia ) இருப்பதாக அறியப்பட்டுள்ளது . பல நேரங்களில் மாணவர்களில் சிலருக்கு கற்றல் குறைபாடு கண்டறியப்படாமல் , கற்பித்தல் நடைபெறும்போது கற்றல் வெளிப்பாடு குறைகிறது . எனவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் கற்றலில் குறைபாடினை அறிந்துகொள்ளும் விதமாக இப்பயிற்சியில் ஓர் தலைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...