Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.09.21

   

திருக்குறள் :

அதிகாரம்:கல்லாமை

குறள்:406

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

பழமொழி :

Action speaks better than words.

சொல்வதைக் காட்டிலும் செயலே சிறந்தது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

 எதுவும் தானாக வளரவேண்டும். அனுபவத்திலும் அதனால் வரும் படிப்பினையிலும் தவிர வேறு எதிலும் மதிப்பு இல்லை. .. சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1.உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு எது? 

இந்தியா.

2.உலகின் மிகப் பெரிய அணை எங்குள்ளது? 

அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

English words & meanings :

Find - to discover and understand. கண்டுபிடித்தல். 

Search - to look for thoroughly in a place. தேடுதல்

ஆரோக்ய வாழ்வு :

இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள்

  • கீரை வகைகள் பொதுவாகவே ஆரோக்கியமானவை. அவற்றை சாலட்களாக சாப்பிடலாம். 
  • ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி போன்ற பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. 
  • தக்காளிப் பழத்தில் இதயத்தை பாதுகாக்கும் சக்திகள் நிறைந்துள்ளது. அதிக அளவு உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் 
  • 70% கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் 
    பிராக்கோலி, இது வெளிநாட்டு உணவு என்றாலும், இந்தியாவிலும் தற்போது கிடைக்கிறது. 
  • ஒமேகா-3எஸ் நிறைந்த மீன்களை அதிகம் சாப்பிடவும். சூரை, காலா, கானாங்கெளுத்தி, கொய்மீன் உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்ளவும். 
  • பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட சத்தான கடலை வகைகளை சாப்பிடவும். 

கணினி யுகம் :

Ctrl + Ins - Copy selected item. 

Shift + Ins - Paste

செப்டம்பர் 29:

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  அவர்களின் நினைவுநாள்


ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் ( மார்ச் 181858 - செப்டம்பர் 291913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

உலக இருதய தினம்





சர்வதேச இருதய அமைப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதியை, உலக இருதய தினமாக அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள். அதில் 75 லட்சம் பேர் மாரடைப்பாலும் 67 லட்சம் பேர் வாத நோயாலும் இறக்கின்றனர்.இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

 பாசமுள்ள சிறுவன்


மாட்டுகாரன் ஒருவர் தன் பசுவோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்த பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது. சிறிய அளவிலான அந்த ரோட்டில் வாகனங்கள் எதுவும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது. மாட்டுகாரன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை எழுப்ப முடியவில்லை. 

அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார். மாட்டுகாரனுடன் சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை 

அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார். நகராமல் இருந்த பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். 

மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார். ஒரு பசுவை ரோட்டிலிருந்து மூன்று பேர் நகர்த்துவதைப் பார்த்து நகைத்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. 

அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவிற்கு கொடுத்தான். பசு புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது. 

நீதி :
அன்பால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

29.09.21

★மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★காந்தி பிறந்த நாள் அன்று சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

★புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

★பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகள் முதல் படிப்படியாகத் திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

★30 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் என்னவென்று இத்தாலியின் மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate)மாநாட்டில் "காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள்" என்ற தலைப்பில் கிரெட்டா துன்பர்க் உலகத் தலைவர்களை விளாசியிருக்கிறார்.

★ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

★ A press release issued by the Department of Employment and Training states that Central Government employees can apply for selected posts.

 ★ The Tamil Development Department has announced that a talk show will be held for school and college students in Chennai on Gandhi's birthday.

 ★ The Minister of Medicine and Public Welfare has said that the Central Government has given permission for the admission of students to the new medical colleges.

 ★ Experts from the ICMR organization suggest that elementary schools can be opened in the first place following a series of layers of security.

 ★ In the youth4climate conference held in Milan city Italy, CretaDunberg had vigorously said to all the world leaders that   You've been talking for 30 years but what's the benefit of that?

 ★ IPL Cricket: Kolkata Knight Riders won the match by 3 wickets against Delhi.
Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive