திருக்குறள் :
அதிகாரம்: கல்லாமை.
குறள் எண்: 405.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
பொருள்: கல்வியறிவு இல்லாதவர்கள் தங்களை மேதைகள் போல காட்டிக்கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும் போது கலைந்து போய்விடும்.
பழமொழி :
Good deeds are never lost.
இட்டுக் கெட்டார் எவருமில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .
2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்
பொன்மொழி :
ஆயிரம் நாள்கள் செய்த நல்லவைகள் ஒரு நிமிட தகாதச் செயலால் நம்மை விட்டுப்போகும். கடந்த நிமிடங்களைக் கடந்து கடமையை செவ்வனே செய்வோம் இனி என மீளப் பாருங்கள்..... அன்னை சாரதா தேவி
பொது அறிவு :
1.கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்த உதவுவது எது?
ரேடான்.
2. பறவைகள் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆர்னித்தாலஜி
English words & meanings :
Fun - when you enjoy yourself.
Funny - when someone or something makes you laugh. நம்மை சிரிக்க வைக்கும் நிகழ்வு
ஆரோக்ய வாழ்வு :
கறிவேப்பிலையின் பயன்கள்
1)கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உடல் பருமன் கணிசமாக குறையும்.
2)கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்க விரும்புவார்கள் தினமும் கறிவேப்பிலையை உண்டு வரலாம்.
3)கறிவேப்பிலைக்கு நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.
கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படுவதை தடுக்கும்.
4)முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.
5)கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக மிக முக்கியம்.
கணினி யுகம் :
Alt + Enter - Open the properties for the selected item,இலூயி பாசுச்சர் (Louis Pasteur, திசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார்.தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாசுச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர்.
பகத் சிங் அவர்களின் பிறந்தநாள்
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.
நீதிக்கதை
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
முத்தமிழ் நாட்டை முத்தமிழ் அரசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தார். அவருக்கு புதியதாக தென்னை தோட்டம் அமைக்க ஆசையாக இருந்தது .
அரண்மனைக்கு அருகில் உள்ள நிலத்தை பண்படுத்தி புதிதாக தென்னை மரங்களை நட்டார்.
தென்னை மரங்களை பாதுகாத்த அரண்மனை சேவகனான சிவம் என்ற காவலனை பணியில் அமர்த்தினார்.
சிவம் நல்ல காவல் காரனாக இருந்தாலும் அவன் ஒரு முட்டாள். இரவு பகலாக காவல் காத்த சிவம், ஒருநாள் மிக சோர்வடைந்தான்.
தென்னை மரங்களை பார்த்து கொள்வது தானே என்வேலை என்று யோசித்த சிவம் , அனைத்து மரங்களையும் பிடுங்கி எடுத்து தனது வீட்டிற்கு எடுத்து சென்று பாதுகாத்தான்.
தென்னை மரங்களை பார்வையிட வந்த அரசர் நடந்த நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டு சிரித்தார்.
யாருக்கு என்ன வேலை கொடுத்தால் நல்லபடியாக முடிப்பார்கள் என்று அறியாமல், உன்னிடம் வேலை கொடுத்தது என்னுடைய தவறு .
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என திருவள்ளுவர் சொல்படி நல்ல காவல்காரனை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னுடையது என்றார் அரசர்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...