திருக்குறள் :
அதிகாரம்: கல்வி
குறள் எண்:399
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
பொருள்: தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
பழமொழி :
A good horse often wants a good spur.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும்.
2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.
பொன்மொழி :
நான் அஞ்ஞானி,ஆத்மாவை இனிமேல்தான் அறியவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் ஒழிக்க வேண்டும். நீங்களே ஆத்மா......ரமண மகரிஷி.
பொது அறிவு :
1.தனிநபர் போட்டிகளில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் யார்?
திரு. சுசில் குமார்.
2.ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
திருமதி . P.V. சிந்து.
English words & meanings :
Ring - a circle of jewelry worn on the finger. மோதிரம்.
Ring - to cause a bell to ring. மணி அடித்தல்
ஆரோக்ய வாழ்வு :
பிளாக் டீயின் நன்மைகள்
1)பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
2)பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.
3)பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.
4)ஒரு கப் பிளாக் டீ உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
5)பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.
6)இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
கணினி யுகம் :
F10 - Activates Windows Menu Bar.
ALT+F4 - -Closes the current window.
செப்டம்பர் 25:
வாங்கரி மாத்தாய் அவர்களின் நினைவுநாள்
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
சதீஷ் தவான் அவர்களின் பிறந்தநாள்
சதீஷ் தவான் (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஒரு இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.
நீதிக்கதை
முயற்சி செய்வோம்
ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.
ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.
நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...