Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.09.21

திருக்குறள் :

அதிகாரம்: அரசியல். 

குறள் எண்:382. 

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. பொருள்: துணிவு, இரக்க சிந்தனை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய இவை நான்கும் அரசுக்குரிய இயல்புகள் ஆகும்

பழமொழி :

As is the king, so are subjects.

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

அன்புதான் மிகவும் அசாத்தியமான கதவுகளை எல்லாம் அகலத் திறந்து விடுகிறது.....விவேகானந்தர்

பொது அறிவு :

1.தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்? 

ஆர். என். ரவி

.2.தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

15 சரணாலயங்கள்.

English words & meanings :

Bat - a nocturnal flying mammal. வவ்வால். 

Bat - a wooden stick used to hit the ball. பந்தடிக்கும் மட்டை

ஆரோக்ய வாழ்வு :

சருமத்தில் ஏற்படும் அரிப்புக்கு இயற்கையான தீர்வு


துளசி

துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்ய கூடியது. இது அரிப்புகளையும் குணப்படுத்த செய்கிறது.  அரிப்பு போன்று நமைச்சலுக்கும் இவை மிகவும் பயனளிக்க செய்யும். தினமும் வெதுவெதுப்பான நீரில் குளித்த உடன் உடலை துடைத்து உலர விட்டு உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். தினசரி இதை செய்து வந்தால் நாளடைவில் சரும அரிப்பு சரியாக கூடும்

ஓட்ஸ்

சரும அரிப்பு அறிகுறிகளை போக்க குளிக்கும் போது ஓட்ஸ் சேர்க்கலாம். ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இவை சரும அரிப்புக்கு மருந்தாகிறது. ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்க ஓட்ஸ் சிறந்த தீர்வாக இருக்கும். குளியல் நீரில் ஓட்ஸ் கலக்கவும். பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் அல்லது பாத் டப்பில் உடல் படுபடி வைக்கவும். ஓட்ஸை நமைச்சல் இருக்கும் இடத்தில் மெதுவாக துடைக்கலாம். தினமும் இதை தடவி வந்தால் சரும அரிப்பு குறையக்கூடும்.

கணினி யுகம் :

F3 - Opens the Find All Files dialog box. 

F4 - Opens the drop-down list box on the toolbar, if there is one.

செப்டம்பர் 23 :

நவநீதம் பிள்ளை



நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 231941தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழர்இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்

சிக்மண்ட் பிராய்ட் 



சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freudசிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். 


நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.


இன்றைய செய்திகள்

23.09.21

★தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

★டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

★தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு உலகப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.

★கரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களிடம் எவ்விதத் தேர்வு, பதிவுக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

★பிரிட்டன் வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

★சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி என பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்.

★ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் சானியா-ஷுவாய் ஜோடி

Today's Headlines

★ The Chennai High Court has accepted the order issued by the Government of Tamil Nadu regarding the appointment of assistants for the visually impaired, thus closed this case after a long time.

 ★ The Central Government has informed the Chennai High Court that the draft on Environmental Impact Assessment Report must be released in all regional languages ​​by October 21 as per the Delhi High Court order.

 ★ Eden Beach in, Pondicherry and Kovalam beaches in Tamil Nadu has received the world-famous Blue Flag Certificate.

 ★ CBSE management has said that no examination or registration fee will be charged to students who have lost their parents due to corona.

 ★ CoviShield is reported to be an approved vaccine for travelers visiting the UK.

 ★ Chennai's F.C.  Coach Pandovich informed that the team will have coaching from the 26th onwards. 

 ★ India's Sania and Shuai advanced to the quarterfinals of the Ostrava Open tennis tournament

Prepared by
Covai women ICT_போதிமரம்






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive