பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகலை அக்.1-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டஅறிவிப்பு:
தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு கடந்த ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை நடந்தது. இதற்கான முடிவுகள் செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் கோரிய தனித்தேர்வர்கள், அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் சென்று அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதன்பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வுத் துறையின் அதே இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 2 நகல்கள் எடுத்து அக்.4, 5-ம்தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 (உயிரியல் தவிர்த்து) செலுத்த வேண்டும்.
உயிரியல் பாடத்துக்கு மட்டும் மறுகூட்டலுக்கு ரூ.305 கட்டணம் வழங்க வேண்டும். கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...