திருக்குறள் :
அதிகாரம்- 25 அருள்உடைமை
குறள் : 244
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.
பொருள்: எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
பழமொழி :
Perseverance kills the game.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.
2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை
பொன்மொழி :
பிறர் குற்றங்களைக் காண்பது போல் தன்னுடைய குற்றங்களையும் காண்பவரது வாழ்வில் துன்பம் என்பது கிடையாது
----- வள்ளுவப் பெருந்தகை
பொது அறிவு :
1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
ஆனந்தபாய் ஜோஷி.
2. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் யார்?
வசந்தகுமாரி.
English words & meanings :
Take it easy - be relaxed, be calm
Face the music - accept the responsibility for something you have done
ஆரோக்ய வாழ்வு :
1)மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பிரண்டையின் தண்டு மற்றும் மிளகு சம அளவு எடுத்துக்கொண்டு துவையல் போல் அரைத்து ஒரு நாளில் இரண்டு வேளை எடுத்துக்கொள்வதன் மூலம் மூச்சுத்திணறல் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
2)பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு முறிவை சரிசெய்வதற்கும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருப்பதற்கும் மற்றும் மூட்டுவலியை சரிசெய்வதற்கும் உதவுகிறது.
கணினி யுகம் :
Ctrl + X -- Cut selected text.
Ctrl + N -- Open new/blank document.
Ctrl + N -- Open new/blank document.
செப்டம்பர் 13 :
* பெஞ்சமின் சாமுவேல் புளூம் அவர்களின் நினைவுநாள்
பெஞ்சமின் சாமுவேல் புளூம் (Benjamin Samuel Bloom, பெப்ரவரி 21, 1913 – செப்டம்பர் 13, 1999) என்பவர் அமெரிக்கக் கல்வி உளவியலாளர் ஆவார். கற்றலில் புலமை பெறுவது தொடர்பான கருத்தியல் கோட்பாட்டில் கல்வி நோக்கங்களை வகைப்படுத்தியதில் பெரும் பங்களிப்பைச் செய்தவர் ஆவார். 1950 களின் மத்தியில் கல்வியின் விளைவுகளைக் குறித்து குறிப்பிடுவது மற்றும் மதிப்பிடுவது தொடர்பான முழுமையான மாதிரியை உருவாக்கிய கல்வியியல் உளவியலாளர்களில் முன்னோடியானவர் ஆவார். [1] இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆவார்.
* ஆர். சூடாமணி அவர்களின் நினைவுநாள்
ஆர். சூடாமணி (ஜனவரி 10, 1931 - செப்டம்பர் 13, 2010) தமிழகப் பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார்.
நீதிக்கதை
கிணற்றில் விழுந்த நரி
ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீர்ருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது.
உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.
உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.
இன்றைய செய்திகள்
13.09.21
★நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் இலக்கைக் கடந்து 27 லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்.
★கரோனா பரவல் காரணமாக 10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
★இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
★செவ்வாய் கிரகத்திலிருந்து பாறைகளை சேகரித்தது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர். அந்த மாதிரிகளில் பண்டைய காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தகவல்.
★ கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 53 ஆண்டுகளுக்குப்பின் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானு சாம்பியன் பட்டம் வென்றார்.
★டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
Today's Headlines
★ More than 27 lakh people have been vaccinated in the mega vaccination camp held yesterday, said Tamil Nadu Health Secretary Radhakrishnan.
★ Chief Minister Stalin has issued an order that all students with disabilities are declared pass in 10th and 11th class by-examinations due to the spread of corona.
★ Coronavirus infection continues to decline in India, says the Federal Ministry of Health.
★ NASA's Perseverance rover collects rocks from Mars. Those specimens are reported to have traces of microbes from ancient times.
★ Emma Radukanu of the United Kingdom wins the women's singles title at the US Open tennis tournament at the Grand Slam after 53 years.
★ Mahendra Singh Dhoni has been appointed as India's advisor for the T20 World Cup.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...