Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.09.21

 திருக்குறள் :

அதிகாரம்:வான்சிறப்பு

திருக்குறள்:11

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

விளக்கம்:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

பழமொழி :

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது

BEND THE TWIG BEND THE TREE

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன. 

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய்.நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் அவ்வாறே ஆகிவிடுவாய்.நீ உன்னை வலிமை உடையவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிவிடுவாய்.

---- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :


1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? 

கங்கை நதி.

2.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

பி.டி. உஷா.


English words & meanings :

1. Sit on the fence - delay in making a decision when you have to choose between two of your favorite sides

2. Heart in the mouth - very nervous.


ஆரோக்ய வாழ்வு :

 1) பப்பாளிப் பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பற்கள், எலும்புகள் வலிமை அடையும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


2)பப்பாளியில் விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி இருப்பதால் இரத்தத்தில் நோய் கிருமிகளை தங்கவிடாமல் உடலைப் பாதுகாக்கும்.


3)டெங்குவை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது பப்பாளி.

கணினி யுகம் :

Ctrl + S - Save

Ctrl + C - Copy



செப்டம்பர் 8 


தேசிய கண் கொடை நாள் (National Eye Donation Day)

        👀 உலகிலேயே இலங்கை கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.


அனைத்துலக எழுத்தறிவு நாள்  ( International literacy day)




        📚  இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 171965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.


நீதிக்கதை

எல்லாம் நன்மைக்கே

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். 

வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே! அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன. 

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். 

அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான். 

அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர். 

நீதி :
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள்

08.09.21

★ தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

★மின் உற்பத்தி திட்டத்துக்கு ஆலோசனை பெற மத்திய அரசு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.

★2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. 

★உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

★50 ஆண்டுகளுக்குப்பின் ஓவலில் இந்தியா வரலாற்று வெற்றி: ரிவர்ஸ் ஸ்விங்கில் படம் காட்டிய பும்ரா; உமேஷ், ஜடேஜா, தாக்கூர் அபாரம்.


Today's Headlines


  🌺 The Chennai metrology department announced that there may be a mild shower of rain for 5 days.


  🌺 To get advice/council for the power generation there is a treaty signed with a central government organization           in the presence of CM.


  🌺  For the 2021 NEET for UG medical entrance exam the hall tickets are published.


  🌺  First time in the World Cuba started vaccination for kids.


   🌺   After 50 years India won a historical victory at the Oval against England. Pumra, Umesh, Jadesha and        Takkur rocks in the field


Prepared by
Covai women ICT_போதிமரம்





1 Comments:

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலை வலைதளத்தில் இந்த தகவல்களை பார்க்கிறேன்.. மிக்க நன்றி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive