அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பிளே ஸ்கூல் இருப்பது கட்டாயம் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தொழிற்கல்விக்கு ( தொழிற்கல்வி, Coding, Augmented & Virtual Reality ) முக்கியத்துவம் தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், மாநிலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதன் மூலாம் புதிய கல்விக் கொள்கை ( NEP )அம்சங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...