நடைபெறவுள்ள செப்டம்பர் 2021
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 03.09.2021 முதல்
22.09.2021 வரையிலும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 02.09.2021 முதல்
21.09.2021 வரையிலும் நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் ( தட்கல் உட்பட ) அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து 25.08.2021 பிற்பகல் 2.00 மணி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
பதிவிறக்கம் செய்யும் முறை :
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM SEPTEMBER 2021 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD என்பதை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் ( Application Number ) மற்றும் பிறந்த தேதியை ( Date of Birth ) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...