விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப் படுகிறது.
ஜனவரி 2021 முதல் 28% அகவிலைப்படி வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பால் ஜூன் 2021 வரை அகவிலைப்படி உயர்வும், அதற்கான நிலுவைத் தொகையும் வழங்கப் பட வில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11% அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப் பட்டு, 28% அகவிலைப் படியை பெற்று வருகின்றனர்.
ஜூன் 2021 வரை விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், ஜூலை 2021 முதல், மேலும் 3% அதிகரித்து 31% அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
இந்த அகவிலைப்படி உயர்வு கருத்துருவை, மத்திய அரசு செப்டம்பரில் அனுமதித்து, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் முதல் ஊதியத்துடனும் (DA 31%) வழங்கும் எனத் தெரிகிறது.
மத்திய அரசை பின்பற்றி, மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
கொரோனாவினால் 18 மாதங்கள் முடக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வினை, மத்திய அரசு திரும்பப் பெற்று, ஜூலை 2021 முதல் தனது ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி வழங்கியிருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைப் பின்பற்றி தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்கும் என்ற நம்பிக்கையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
mathya arasu enpadarku pathil yan onriya arasu ena sollvatharku karanaam solla mudiyma kaikooligale?
ReplyDelete