அமைச்சரவை கூட்டம்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் (ஆகஸ்ட் 4) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களது ஓய்வு காலத்தை 58லிருந்து 60 ஆக உயர்த்தி முந்தைய ஆட்சியில் இருந்த அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் கூடுதலாக 2 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருப்பதால், அரசுத்துறைகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது.
இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்பொழுது ஆட்சியமைத்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண விரும்புகிறது.
ஓய்வு வயது 58 ஆக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது:
அதாவது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய அரசு வேலைகளை பெற்றுக்கொள்வதில் ஓய்வு காலம் தடையாக இருப்பதால் இந்த காலத்தை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கொரோனா நோய் தொற்று காரணமாக அரசுக்கு பெருமளவு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வு பெற வேண்டிய அரசுத்துறை ஊழியர்கள், கிட்டத்தட்ட 9 மாதங்களாக பணியில் தொடர்ந்து வருவதால், அவர்களை மேலும் 3 மாதங்களுக்கு பணிபுரிய அனுமதித்து ஓய்வு அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...