ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 . அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் இக்கல்வியாண்டிற்கான ( 2021-22 ) அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( BT Staff Fixation ) சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.
எனவே , இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் EMIS இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1 ) மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class wise ) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக.
2 ) ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட ( Sanctioned Post details ) அனைத்துவகை ஆசிரியர்கள் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.
3 ) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்கள் சார்பான முழு விவரங்களையும் ( Teacher Profile ) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...