மாணவர்களிடம் பொதுத்தேர்வு அச்சம் நீக்கிட சிபிஎஸ்சி யினை தொடர்ந்து தமிழகத்திலும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பருவமுறைத் தேர்வு மற்றும் பேரிடர் மேலாண்மை பாடபிரிவும் பரிசீலிக்கவேண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன
அறிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் மதிப்பெண்ணை நோக்கியே காலம் கடந்துசெல்கிறது. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு குழந்தைகளிடம் திணிக்கவே முயற்சித்துவருகிறார்கள். கல்வி -அறிவை வளர்ப்பதற்கு உதவவேண்டும். வேலைவாய்ப்பை உறுதிசெய்வதற்கு உரமிடுவதில்லை.
தேர்வு என்பது கற்றக்கல்வி முழுமையாகச் சென்றடைந்ததா என்பதை அறிவதற்குதான் அதுவே அச்சத்தை உண்டாக்கி மனஉளைச்சலை உருவாக்கிடக்கூடாது.
குழந்தைகளை கட்டாயப்படுத்தி கற்பதில்லாமல் விரும்பிப்படித்தால் சிந்தனைவளரும்.
ஒவ்வொருமுறையும் பள்ளி இறுதித்தேர்வின் போதும் பெற்றோர்களும் மாணவர்களும் ஒருவிதப்பயத்தோடு அணுகுவது அறியமுடிகிறது. மேலும் இயற்கைப்பேரிடர் போன்றக் காலகட்டத்தில் தேர்வு எழுதமுடியாதச் சூழலினால் என்வாகும் என்ற குழப்பநிலை நீடிக்கிறது. ஆகையால் கல்லூரிக் கல்வி பருவமுறைத் தேர்வுபோன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கும் பருவமுறைத்தேர்வு அறிமுகப்படுத்திடவேண்டும். பருவமுறை தேர்வினால் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதிடவும் குறைந்தப் பாடத்திட்டம் என்பதாலும் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள்.மேலும் காலத்தின் கட்டாயத்தினைக்கருதி அனைத்து வகுப்புகளுக்கும் பேரிடர் மேலாண்மை பாடமும் மற்றும் மாணவர்களிடையே ஒழுக்கநெறிமுறைகளை வளர்த்திட நீதிபோதனைக்கென்று தனிப்பாடமும் உருவாக்கிடவேண்டும். ஆகையால் சிபிஎஸ்சி யினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பருவமுறைத்தேர்வு நடைமுறைபடுத்திடவேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பைப் போலவே 10 ஆம் வகுப்பிற்கும் அகமதிப்பெண்கள் வழங்கி உதவிடவேண்டும். இதன்மூலம் கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடப்பதோடுதொடர் மதிப்பீடு மூவம் மாணவர்கள் ஈடுபாட்டுடன் படிப்பதற்கு வழிவகுக்கும்.எனவே நல்லாட்சி நடத்திவரும் மாண்புமிகு. முதல்வர் அவர்கள் மாணவர்களின் நலன்கருதி 10,12 ஆம் வகுப்புகளுக்கு பருவமுறைத்தேர்வு களை கொண்டுவர ஆவனச்செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...