மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்துள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை 20 ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக CBSE தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள்:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் அம்மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த தேர்வு வாரியம் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது CBSE பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை 20 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட இருப்பதாக CBSE தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை CBSE மாணவர்கள் அனைவரும் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ CBSE இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் போர்டு ரோல் எண், பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்தி CBSE போர்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக முதலில், அதிகாரப்பூர்வ CBSE வலைத்தளத்திற்கு செல்லவும்.
http://cbseresults.nic.in/CBSEResults/Page/Page?PageId=19&LangId=P என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
ரிசல்ட் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த இணையதளத்தில் உங்களது பெயர், ரோல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
பின்னர் உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இந்த மதிப்பெண்களை எதிர்கால பயன்பாடுகளுக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.
CBSE வாரியம் அறிவிக்கும் இந்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு மீண்டுமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று நிலைமைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த விருப்பத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது இறுதி மதிப்பெண்களாக கருதப்பட வேண்டும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டுக் கொள்கையின் படி, மாணவர்களின் உள் மதிப்பீடுகளுக்கு 20% மதிப்பெண்களுக்கும், மீதமுள்ள 80% மதிப்பீடு பள்ளிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...