திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு, புத்தாக்கப்பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக, பல்வேறு கல்விசார் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், கல்வி தொலைக்காட்சி, சமுதாய ரேடியோ ஆகியவற்றில் மாணவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.தவிர, முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி கட்டகமும், பாடநுாலாக தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, உடுமலை அடுத்த திருமூர்த்திநகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வகையில், முதல்வர் சங்கர் தலைமையில் விரிவுரையாளர் பாபிஇந்திரா மேற்பார்வையில், பிளஸ் 1 பாடப்புத்தகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் பாடக்கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...