தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா 2 ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் கல்லூரிகளில் 2 ஆவது மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2 ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...