புதுடில்லி:ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி எடுத்துக் கொண்டோரில், 16.1 சதவீதம் பேரின் உடலில், வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.
அறிக்கை
அதனால், மூன்றாவது டோஸ் தடுப்பூசி அவசியம் என்பது தெரிய வந்துள்ளது.கொரோனா தடுப்பூசி தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்தப்பட்டோரிடம் ஆய்வு செய்யப் பட்டது. அதன்படி ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோரில், 58.1 சதவீதம் பேரிடம், தற்போது பரவி வரும், 'பி1.617.2' எனப்படும், டெல்டா வகை வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை.அதே நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்தவர்களில், 16.1 சதவீதம் பேரிடம், நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதாவது இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும்.
மூன்றாவது டோஸ்
அது, மற்ற நோய்களில் இருந்து அவர்களை காப்பாற்றும். இருப்பினும் முழுமையான பலன், பாதுகாப்பு பெறுவதற்கு, மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்ததாக இருக்கும்.அதே நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன்பின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானதாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» தடுப்பூசி இரண்டு டோஸ் போதாது: புதிய ஆய்வில் தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...