ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள்
22.01.2019
முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பீங்கேற்ற
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு
நடவடிக்கைகள் கைவிடப்பட்டும் , தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து
செய்தும் அரசாணை ( நிலை ) எண் 9 , பணியாளர் மற்றும் நிருவாகச்
சீர்திருத்தத் ( கே ) துறை நாள் 02.02.2021 வெளியிடப்பட்டது . மேற்கண்ட |
அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து முதன்மைக்கல்வி
அலுவலர்களுக்கு பார்வை ( 2 ) ன்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சார்ந்த
அரசாணையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள்
மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும் , ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை
வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் ஆணை வழங்கிய விவரங்கள் கோரப்பட்ட
போது ஒருசில மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய
வருகிறது . அதன் காரணமாக அரசாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு
கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு
வழங்கப்படுகிறது.
What about those days salary? To b reimbursed r not?
ReplyDelete