தமிழகத்தில் கல்லூரிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிகைகளை எடுக்க துணை வேந்தர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தவிட்டுள்ளார். மேலும் பல்கலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எந்த நேரத்திலும் துணைவேந்தர்கள் தன்னை சந்தித்து பேசலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லுரிகள் மூடப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. செமஸ்டர் தேர்வுகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக தலைமையேற்ற திமுக தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக உயர்கல்வியின் தரத்தையும் உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தலைமையில், பல்கலை துணைவேந்தர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் பல்கலை மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும் அலுவலக பணியர்க்ள நியமனம் போன்றவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குழப்பம் நிலவி வருகிறது. இதனால் நியமன பட்டியல்களை எடுக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை வேந்தர்களும், கல்லூரி முதல்வர்களும் பணி நியமனங்களில், எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு, துணை வேந்தர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பல்கலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எந்த நேரத்திலும் துணைவேந்தர்கள் தன்னை சந்தித்து பேசலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...