Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மீண்டும் உயரும் தொற்று ! - சென்னையில் 9 இடங்களில் மக்கள் செல்ல தடை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை 
IMG-20210731-WA0002

கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 09.082021 வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் . தற்பொழுது அண்டை மாநிலங்களிலும் , மாநிலத்தின் சில பகுதிகளிலும் , நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி , இஆப , அவர்கள் பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் திரு சங்கர் ஜிவால் இகாப , ஆகியோர் தலைமையில் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று ( 30.07-2021 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை , புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை , ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை , ஃபக்கி சாஹிப் தெரு , அபிபுல்லா தெரு . புலிபோன் பஜார் , என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை , இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை , வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை , அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உ உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.விகநகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31072021 ( சனிக் கிழமை ) முதல் 09.082021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியி லை , மேலும் , கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive