Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் ஓய்வு வயதுமீண்டும் 58 ஆக குறைய வாய்ப்பு! - "பாண்ட்" வழங்கவும் ஆலோசனை?

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்கலாம் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 2 வருடங்கள் அதிகரித்தார். அதாவது 60ஆக உயர்த்தினார்.


இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய பல செட்டில்மென்ட்கள் தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம்.


இளைஞர்களுக்கு வேலை தேவை

தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணையையும் பிறப்பித்திருந்தனர். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் அரசு துறைகளில் உருவாகவில்லை. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும் தடை விழுந்தது.


ஸ்டாலின் விருப்பம்

இந்த நிலையில், தற்போது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின், 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


3 மாதத்தில் ஓய்வு தரலாமா

குறிப்பாக, 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் 9 மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள். அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்துள்ளது. அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும் ; அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை; ஆனால், தற்போதையை நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாண்ட் கொடுக்கலாமா

இதனை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது, ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு பணமாக மாற்றிக்கொள்ளும் வகையில் பாண்ட் (பத்திரங்கள்) கொடுத்து விட்டால் சமாளிக்கலாமே என்பதாக விவாதம் நடந்துள்ளது.


தீவிர ஆலோசனை

அதேநேரம், பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஏற்கமாட்டார்கள்; 58 ஆக குறைப்பது சர்ச்சையையே ஏற்படுத்தும் , யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன வழிகள் இருக்கு ? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம் ? என்கிற ஆலோசனை முற்றுபெறவில்லை. இதனை அறிந்து அரசு ஊழியர்கள் அப்-செட்டாகியிருக்கிறார்கள்.








5 Comments:

  1. இந்த அரசுக்கு வாக்களித்தால் நல்லது நடக்கும் என்று வாக்களித்த ஆசிரியர்களிடையே அதிர்ப்தி உண்டாகும்.

    ReplyDelete
  2. ஒய்வு பெரும் வயதை உயர்த்தும்போது வரவேற்று பாராட்டிய முன்னாள் எதிர்கட்சி தலைவர், முதல்வர் பொறுப்பேற்றவுடன் வயதை குறைக்க ஆலோசிக்கின்றார் என்பது இரட்டை நிலைப்பாடு. அப்படிப்பட்ட சிறுபிள்ளை தனமான செயலில் எப்பொழுதும் ஈடுபடமாட்டார் என்பதை முதிர்ந்த சிந்தனையாளர்களுக்கு நன்றாக தெரியும். காரணம் மாண்புமிகு தளபதியார் அவர்கள் அரசியல் சாணக்கியர் முத்தமிழ் அறிஞரின் அசல் வழிதோன்றல். பிதற்றலை தவிர்த்து உருப்படியான வேலையை பாருங்க.

    ReplyDelete
  3. வேறு வேலையே இல்லையர?ஒவ்வொரு govt போடும் ஒவ்வொரு G.O ஐயும் மரற்றிக்கொண்டே இருப்பதும் இந்த govt க்கும் வேலையர போய்ட்டு இருக்கு.

    ReplyDelete
  4. He got employment in the age of 40-50. He will serve only 10 years. Your suggestion is not in good taste

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive