தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தமிழக காவல் துறை,
சிறைத்துறை, தீயணைப்புத்துறை என 10,906 பணியிடங்களுக்கான விண்ணப்பம்
அறிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி
நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கான முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வாணையம்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும்
சான்று சாரிபார்ப்பு நடைபெற்ற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக உடல்
தகுதி தேர்வு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு இன்று முதல் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டுவர வேண்டும். இன்று நடைபெறும் தேர்வில், உடல் தகுதி, சான்று சரிபார்ப்பு, உடல் அளவு தேர்வுகள் நடைபெறுகிறது. விண்ணப்பதார்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வர வேண்டும். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...