மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரி அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை 17% ல் இருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அகவிலைப்படி மற்றும், ஓய்வூதிய படிகளை கொரோனா பெருந்தொற்று காரணமாக நிலுவையில் வைத்தது. கொரோனா தொற்று சமயத்தில் நாட்டில் அதிக செலவுகள் இருப்பதாகவும், ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் சரிவடைந்து இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால் கடந்த 2020 ஜனவரி 1 முதல் 3 தவணைகளாக அகவிலைப்படி உயர்வினை நிலுவையில் வைத்தது.
சமீபத்தில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் DA உயர்வு குறித்து அறிவிப்புகள் அப்போது அறிவிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய உள்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள புதுச்சேரி அரசுத் துறைச் செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பில், முன்தேதியிட்டு ஜூலை 1 முதல் வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளதால், அவ்வாறே வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...