10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் ஆல்பாஸ் என அரசுஅறிவிக்க வேண்டுமென்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கொரோனா பெரும் தொற்றில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியை எதிர்நோக்கி இருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு முதலில் அறிவித்தது. அதை பின்தொடர்ந்து தமிழக அரசும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதைப் பின்தொடர்ந்து அவர்களின் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தனித்தேர்வர்களாக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அதோடு அவர்களுக்கான தேர்வையும் அக்டோபர் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள். அக்டோபரில் தேர்வு பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால் எப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் .
அதோடு தனித்தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு 10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்ச்சியை முன்கூட்டியே ஆல் பாஸ் என அறிவித்து அவர்களுக்கு முறையான மதிப்பெண் வழங்கப்பட்டால் அந்த மாணவர்களும் கல்லூரியில் சேருவதற்கு வசதியாக இருக்கும்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தனித் தேர்வர்கள் நலன் காக்க.@Anbil_Mahesh @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/FImRaRxaPu
— Vanathi Srinivasan (@VanathiBjp)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...