சென்னை உட்பட தமிழகம் முழுவதும் SBI வங்கி ஏடிஎம் மையங்களில் மட்டும் ரூ.48 லட்சம் திருட்டு போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே டெபிட் கார்டு மூலம் பல முறை படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் வேறு மாநிலங்களிலும் நூதன முறையில் கடந்த சில வாரங்களில் ஏடிஎம் திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 3 நாட்களில் பல்வேறு இடங்களில் 7 ஏடிஎம்களில் இருந்து புகார் வந்துள்ளது. ஏடிஎம் கார்டு கொள்ளையடிக்க எந்த கார்டு உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றுவதற்கு ஆலோசித்து வருகிறோம்” என்றும் கூறினார்.
இதன் எதிரொலியாக நாடு முழுவதும் SBI வங்கி ATM டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று SBI பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் டெல்லி கும்பல் நூதன முறையில் கைவரிசை காட்டியதை தொடர்ந்து எஸ்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...