கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள அல்லது தொற்று ஏற்பட்டாலும் தீவிரமான நிலைக்கு சென்று விடாமல் தடுக்க கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் COVID தடுப்பூசி தொடர்பாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நோயெதிர்ப்பு குறைபாடுடன் இருக்கும் போது இயல்பாகவே ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பும் குறைவாக உள்ளது
இது நோய் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை பாதிக்கிறது. ஒருவரது நோயெதிர்ப்பு அமைப்பு எதனால் பலவீனமாக உள்ளது என்பதை பொறுத்து, இந்த நிலை நிரந்தரமானதாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்கலாம் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. அவர்கள் பதற்றத்தை குறைத்து தடுப்பூசி பற்றி முடிவெடுக்க இந்த கட்டுரை உதவ கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?
நோயெதிர்ப்பு சக்தி என்பது தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க நமது உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு சக்தி ஆகும். எளிமையாக சொல்வதென்றால் வெளியில் இருந்து உடலினுள் நுழைந்து நோயை ஏற்படுத்தும் பொருள் அதாவது ஆன்டிஜென் என்று கருதும் எதையும் எதிர்த்துப் போராடும் சக்தியாக இது இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியில், 'இன்டேட்' மற்றும் "அக்கொயர்ட்" என இரு வகைகள் உள்ளன. இதில் 'இன்டேட்' என்பது பிறந்ததில் இருந்தே இருக்க கூடிய பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியாகும். வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் உடலினுள் நுழைந்தால், அதை எவ்வித பிரச்னையும் இல்லாமல், அவற்றை வெளியேற்றி உடல் தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும்.
அக்கொயர்ட் என்பது வெளிப்புற தூண்டுதல்களால் குறிப்பிட்ட காலப்பகுதியில் நாம் பெறும் நோயெதிர்ப்பு சக்தி ஆகும். கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் நுழையும் போது, நம் உடல் அதை ஆன்டிஜெனாகக் கண்டறிகிறது. நமது நோயெதிர்ப்பு அமைப்பு அதனுடன் போராட தொடங்குகிறது. அதே நேரத்தில் இதே போன்ற ஆன்டிஜெனுக்கு இரண்டாவது முறையாக தொற்று ஏற்பட்டால் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற வைரஸின் கட்டமைப்பை நினைவில் கொள்கிறது. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில் இந்த சக்தி நோயெதிர்ப்பு திறன் கொண்டவர்களை விட குறைவாக காணப்படுகிறது.
***
நோயெதிர்ப்பு குறைபாடு யாருக்கெல்லாம் காணப்படும்?
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள தனிநபர் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஆன்டிஜென்களுடன் திறம்பட போராட இயலாது. மோசமான ஊட்டச்சத்து கொண்ட நபர்கள் (பெரும்பாலும் குறைந்த சமூக பொருளாதார நிலை அல்லது சில ஊட்டச்சத்து குறைபாடு நோய்க்குறி கொண்டவர்கள்) அல்லது எச்.ஐ.வி தொற்று காரணமாக ஏற்படும் எய்ட்ஸ், காசநோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், சிஓபிடி போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், புற்றுநோய், அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் எடுத்து கொள்பவர்களுக்கு பெரும்பாலும் நோயெதிர்ப்பு குறைபாடு ஏற்படுகிறது.
***
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை தொற்று அதிகம் தாக்குகிறதா?
ஆம். ஏனென்றால் ஆன்டிஜெனுக்கு எதிராக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக போராட முடியாமல் போவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை கொரோனா போன்ற தொற்று நோய்கள் எளிதாக தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.
***
தடுப்பூசி கட்டாயம் தேவையா?
ஆமாம், நிச்சயமாக. ஏனெனில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் கொரோனா நோய் தொற்றால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அவர்களுக்கு நிச்சயமாக தடுப்பூசி தேவை.
***
நோயெதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு பலனளிப்பதை போல தடுப்பூசி இவர்களுக்கு பலன் தருமா?
தடுப்பூசி என்பது வைரஸின் கட்டமைப்பை ஒத்த ஒரு ஆன்டிஜென் ஆகும். ஆனால் இது நோய் கிருமி தன்மை இல்லாமல் அதாவது நோயை ஏற்படுத்தும் சக்தி இல்லாத வைரஸ் ஆகும். இந்த நோய்க்கிருமி அல்லாத ஆன்டிஜெனுக்கு பதிலளிக்கும் விதமாக இயற்கை ஆன்டிபாடிகளை உருவாக்க, நோயெதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்க செய்கிறது. ஆனால் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில் இந்த சக்தி குறைவாக உள்ளது, எனவே நோயெதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுடன் ஒப்பிடுகையில் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு தடுப்பூசி மூலம் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியே உற்பத்தி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
***
தடுப்பூசிக்கு பிறகு எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பதை கண்டறிய டெஸ்ட் இருக்கிறதா?
இருக்கிறது. நோய் தொற்று அல்லது தடுப்பூசி போட்டு கொண்டதால் உருவாகி இருக்கும் ஆன்டிபாடிகளின் அளவைக் கண்டறிய லேப் டெஸ்ட்கள் உள்ளன.
டெஸ்ட்டிற்கு பிறகு கண்டறியப்பட்ட ஆன்டிபாடிகள் போதுமானதா என்பதை எப்படி அறிவது?
ஆன்டிபாடிகளின் அளவை கண்டறிய டெஸ்ட் இருந்தாலும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க தேவையான ஆன்டிபாடிகளின் அளவு குறித்த சரியான விவரம் இன்னும் இல்லை. தனிநபர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார் என்ற தகவலை மட்டுமே இது நமக்கு தருகிறது.
***
ரத்தத்தில் கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகள் இல்லாத நபர்கள் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதா?
ஆன்டிபாடிகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பது என்பது எதிர்வரும் காலங்களில் தொற்றிலிருந்து பாதுகாப்பை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. நல்ல அளவு ஆன்டிபாடி உள்ள நபருக்கும் கூட நோய் தொற்று ஏற்படலாம் அல்லது ஆன்டிபாடி இல்லாத நபர் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவராக இருக்க முடியும். இதுவரை எதையும் உறுதியாகச் சொல்ல கூடிய தகுந்த ஆய்வு முடிவுகள் இல்லை.
***
பின் தடுப்பூசியின் பயன் தான் என்ன?
தற்போது தடுப்பூசி என்பது நோய் தொற்றை முழுவதுமாக தடுக்க கூடியது என்று அறியப்படவில்லை. மாறாக ஒரு பெரிய சதவீத நபர்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக அல்லது நோய் தொற்று ஏற்பட்டால் நோய் தீவிரமாக ஏற்படும் லேசானதாக இருக்கும் என்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
***
இந்த செய்தியையும் படிங்க...
"முழு ஊரடங்கிற்கு (FULL LOCKDOWN) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்- மக்கள் நடந்து கொள்ள வேண்டும்":முதலமைச்சர்
நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்லது குறைபாடு உடையவர்கள் இதில் யார் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்?
நோயெதிர்ப்பு சக்தி இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அனைவருமே தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயமே உள்ளது. தடுப்பூசிக்குப் பிறகு ஆன்டிபாடிகள் உருவாகின்றனவா இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தொற்று பரவலின் சங்கிலி உடையவும், கோவிட் இறப்பு குறைவதற்கான வாய்ப்பும் அதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...