தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php
என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள்
அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில்
அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு
100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில்
முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை கண்காணிக்கவும் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...