கல்வி, 'டிவி' வகுப்புகள் குறித்த, மாணவர்களின் சந்தேகங்களை, மொபைல் போன் வழியாக தீர்க்க, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கல்வி, 'டிவி' வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணையை, மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' முறையில் அனுப்ப வேண்டும். 'ஸ்மார்ட்' போன் வசதி இல்லாத மாணவர்களுக்கு, புத்தகம் வாங்க வரும் போது, 'டிவி' நிகழ்ச்சி அட்டவணை பிரதியை நேரில் வழங்க வேண்டும்.பள்ளிகளில், அட்டவணை விபரத்தை, அறிவிப்பு பலகையில் இடம் பெறச்செய்ய வேண்டும்.
வீட்டில் வகுப்புகளை கவனிப்பதை, ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.ஸ்மார்ட் போன் மற்றும்கல்வி, 'டிவி' பார்க்க வசதியில்லாத மாணவர்களின் விபரங்களை, ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும்.வகுப்புகளில் வழங்கப்படும், வீட்டுப் பாடங்களை மாணவர்கள் செய்து, அவற்றை, 'ஸ்மார்ட்' போனில், ஆசிரியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.பாடங்கள் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களை, ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக தீர்த்து வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும், மொபைல் போன் எண் வழங்க வேண்டும். ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்களின், பெற்றோரை நேரில் பள்ளிக்கு வரவழைத்து, மாணவர்களின், 'அசைன்மென்டு'களை வாங்கி, அதை மதிப்பீடு செய்ய வேண்டும். கல்வி, 'டிவி' மற்றும், 'யூடியூப் சேனலில்' வகுப்புகளை கவனிக்கவும், மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...