பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஏற்கனவே அனுப்பப்பட்ட உத்தரவுப்படி 14.06.2021 (திங்கள்) முதல் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களும், தொடக்க- நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் வருகை புரியவேண்டும் என தெளிவாக குறிப்பிட்டு இருந்தும், சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக தெரியவருகிறது. கொரோனா இரண்டாம் அலையில் பல ஆசிரியர்களை இழந்து இருப்பதோடு, பல ஆசிரியர்கள் நோய்தொற்றிலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாமல் மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாமல் இருக்கும்போது ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்தால் நோய்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் அரசு உத்தரவை பின்பற்றாமல் தன்னிச்சையாக ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது ஏற்புடையது அல்ல. எனவே மதிப்புமிகு தலைமையாசிரியர்கள், ஆணையர் மற்றும் அரசு உத்தரவை பின்பற்றி ஆசிரியர்களை நோய்தொற்றிலிருந்து காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக் கல்வி ஆணையரின் உத்தரவை மீறி ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்கும்பட்சத்தில் ஆசிரியர்களின் நலன்காக்க சம்மந்தப்பட்ட உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..
💐💐💐என்றும் ஆசிரியர் நலனில்💐💐தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், கரூர் மாவட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...