GO 1D NO : 83 , DATE : 17.06.2021 - Download here...
பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர்
பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த
நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , "
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.
இக்குழுவில்
பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக
உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத
பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர்
உறுப்பினர்களாக இருப்பர் .
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும்.
அனைத்துத்
தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில்
கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்
வசதி உருவாக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு
ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக
மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC )
தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது
மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு
நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.
இம்மையத்தில்
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல்
பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
.
பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல்
உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
பள்ளிகளில்
பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை
உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module )
உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல்
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக
உடை அணியவேண்டும்.
இணையவழிக் கற்றல் - கற்பித்தல்
நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட
இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு
செய்யவேண்டும்.
• புகார் மற்றும் மாணவர்களின்
கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப்
பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை
எடுக்கும்.
• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு ,
பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு
பதிவேட்டைப் பராமரிக்கும்.
புகாரானது எந்த
முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில்
பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15
முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...