கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் A++ தரக் குறியீடு பெற்று முதலிடம்.
கடந்த 2017 -18 ஆம் கல்வி ஆண்டை அடிப்படையாக கொண்டு,பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில்,தற்போது 3-வது முறையாக 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை,மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி,பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு,சண்டிகர்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள்,அதிக தரவரிசை குறியீட்டை பெற்று முதலிடத்தில் இருப்பதாக,அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர்,அந்தமான் நிக்கோபார் போன்ற மாநிலங்கள் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது,மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில், அவற்றின் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகிறது.
அந்த அடிப்படையில் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு A++ என தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும்,புதுச்சேரி, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...